Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் அடுத்தடுத்து சாலைமறியல்

மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் அடுத்தடுத்து சாலைமறியல்

மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் அடுத்தடுத்து சாலைமறியல்

மேலப்பாளையத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் அடுத்தடுத்து சாலைமறியல்

ADDED : ஜூலை 26, 2011 01:41 AM


Google News

திருநெல்வேலி : மேலப்பாளையத்தில் சீரான குடிநீர் சப்ளை அளிக்க வலியுறுத்தி பெண்கள் காலிக்குடங்களுடன் அடுத்தடுத்து சாலைமறியலில் ஈடுபட்டனர்.நெல்லை மாநகராட்சியில் மேலப்பாளையம் பகுதியில் குடிநீர் பிரச்னை அதிக அளவில் உள்ளது.

அங்கு குடிநீர் பிரச்னையை சரிசெய்ய தகுந்த நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் ஆவேசமடைந்த மேலப்பாளையம் பகுதி மக்கள் அவ்வப்போது போராட்டம் நடத்தி வருகின்றனர்.மேலப்பாளையம் 36, 37வது வார்டுகளை சேர்ந்த பெண்கள் தங்கள் பகுதிக்கு சீரான குடிநீர் சப்ளை அளிக்க வலியுறுத்தி கொடிமரம் ஸ்டாப் அருகே நேற்று காலை காலிக்குடங்களுடன் திரண்டு சாலைமறியலில் ஈடுபட்டனர். கோரிக்கையை வலியுறுத்தி அவர்கள் கோஷமிட்டனர்.



வாகனப்போக்குவரத்து பாதிக்கப்பட்டது. பின்னர் பெண்கள் கலைந்து சென்றனர்.சிறிதுநேரத்திற்கு பின் பெண்கள் மீண்டும் அதே இடத்தில் மறியலில் ஈடுபட்டனர். மாநகராட்சி மண்டல உதவி கமிஷனர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். 'குடிநீர் சப்ளையை சீர்செய்ய விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும்' என உதவி கமிஷனர் உறுதியளித்தார். இதையடுத்து பெண்கள் மறியலை கைவிட்டனர். வாகனப்போக்குவரத்து சீரானது.







      Our Apps Available On




      Dinamalar

      Follow us