/உள்ளூர் செய்திகள்/புதுச்சேரி/காங்., கூட்டணி தேர்தல் பணிக் குழு அறிவிப்புகாங்., கூட்டணி தேர்தல் பணிக் குழு அறிவிப்பு
காங்., கூட்டணி தேர்தல் பணிக் குழு அறிவிப்பு
காங்., கூட்டணி தேர்தல் பணிக் குழு அறிவிப்பு
காங்., கூட்டணி தேர்தல் பணிக் குழு அறிவிப்பு
ADDED : அக் 05, 2011 01:21 AM
புதுச்சேரி : இந்திரா நகர் இடைத் தேர்தலுக்கு காங்., கூட்டணி சார்பில் தேர்தல் பணிக் குழு அமைக்கப் பட்டுள்ளது.
காங்., தலைவர் ஏ.வி.சுப்ரமணியன் வெளியிட்டுள்ள அறிக்கை:இந்திரா நகர் இடைத் தேர்தலில் காங்., கூட்டணி கட்சிகளான தி.மு.க., புதிய நீதிக் கட்சி, படைப்பாளி மக்கள் கட்சி, தேசியவாத காங்., இந்திய குடியரசு கட்சி ஆகிய கட்சிகள் அடங்கிய தேர்தல் பணிக்கு குழு அமைக்கப்பட்டுள்ளது.தர்மாபுரி: முன்னாள் எம்.எல்.ஏ., சோமசுந்தரம், செல்வம், ஆறுமுகம், தேசியவாத காங்., தலைவர் சுந்தரமூர்த்தி, காங்., எஸ்.சி., பிரிவு துணைத் தலைவர் பக்தவச்சலம்.முத்திரையர்பாளையம்: முன்னாள் எம்.எல்.ஏ., ராஜாராமன், பாரதிதாசன், வக்கீல் செந்தில்குமார், புதிய நீதிக்கட்சி தலைவர் பொன்னுரங்கம், காங்., எஸ்.சி., பிரிவு துணைத் தலைவர் வீரமுத்து.கோவிந்தன்பேட்: நந்தா சரவணன் எம்.எல்.ஏ., முன்னாள் கவுன்சிலர் செல்வம், நடராஜன், இந்திய குடியரசு கட்சி தலைவர் ரத்தினவேலு, தேசியவாத காங்., ரவிச்சந்திரன், ஐ.என்.டி.யு.சி., ஒருங்கிணைப்பு செயலர் சரவணன்.திலாபேட்டை: முன்னாள் எம்.எல்.ஏ., சிவா, குமார சுப்ரமணியன், பி.சி.சி., அழைப்பாளர் கணேசன், புதிய நீதிக் கட்சி இணைச் செயலாளர் காமராஜ், படைப்பாளி மக்கள் கட்சி துணை செயலாளர் கோபாலகிருஷ்ணன்.
காந்தி நகர்: முன்னாள் எம்.எல்.ஏ., கென்னடி, அமாவாசை, அருள்செல்வி, படைப்பாளி மக்கள் கட்சி பொது செயலாளர் சுப்ரமணியன், புதிய நீதிக்கட்சி செயலாளர் தேவநாதன்.காமராஜ் நகர் (போலீஸ் குவார்ட்டர்ஸ்): முன்னாள் எம்.எல்.ஏ., எம்.ஏ.எஸ்.
சுப்ரமணியன், இளங்கோ, லோகநாதன், படைப்பாளி மக்கள் கட்சி தலைவர் தங்கம், புதிய நீதிக்கட்சி துணைத் தலைவர் கிருஷ்ணமூர்த்தி.ஜிப்மர்: முன்னாள் அமைச்சர் எஸ்.பி.சிவக்குமார், நளினி சாரங்கன், புதிய நீதிக் கட்சி இளைஞரணி தலைவர் நடராஜன், படைப்பாளி மக்கள் கட்சி பொருளாளர் வரதன், காங்., எஸ்.சி., பிரிவு தலைவர் சாமிநாதன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர்.


