ADDED : செப் 16, 2011 12:05 AM
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில், மக்கள் நல சங்க மாதாந்திர செயற்குழு கூட்டம் நடந்தது.
தலைவர் முனியப்பன் தலைமை வகித்தார். துணை தலைவர் அர்சுணன், மோகன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். செயலாளர் அன்பரசு தீர்மானங்கள் குறித்து பேசினார். 'காவேரிப்பட்டணம் வீட்டு வசதி வாரிய குடியிப்பு பகுதியில் அரசு போக்குவரத்துக் கழக பஸ்கள், நின்று செல்ல வேண்டும். கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வனப்பகுதியை ஒட்டியுள்ள விவசாய நிலங்களில், காட்டு விலங்குகளால் ஏற்படும் சேதங்களை தடுக்க, சோலார் மின் வேலிகள் அமைக்க வேண்டும். அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில், பாம்பு கடிக்கான சிகிச்சை அளிக்க போதிய மருந்துகள் தயார் நிலையில் வைக்க வேண்டும்' என்பன உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றினர். சங்க ஆலோசகர் பால்ராஜ். துணை தலைவர் திருநாவுகரசு, செயற்குழு உறுப்பினர் முனியப்பன், சந்திரசேகர், ஜவஹர், கிருஷ்ணன், ரங்கநாதன், வீட்டு வசதி வாரிய குடியிருப்போர் நல சங்க தலைவர் சக்கரைவேலு உட்பட பலர் கலந்து கொண்டனர்.


