உள்ளாட்சிகளில் முறைகேடுகள் விசாரணை நடத்த அரசு முடிவு
உள்ளாட்சிகளில் முறைகேடுகள் விசாரணை நடத்த அரசு முடிவு
உள்ளாட்சிகளில் முறைகேடுகள் விசாரணை நடத்த அரசு முடிவு
ADDED : ஆக 03, 2011 12:45 AM
கம்பம் : உள்ளாட்சி அமைப்புகளில் கடந்த ஐந்து ஆண்டுகளில் நடந்த முறைகேடுகள் பற்றி விசாரணை நடத்த அரசு முடிவு செய்துள்ளது..
ஊராட்சி, பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சிகளில் வரும் அக்டோபர் மாதம் மூன்றாவது வாரத்தில் கவுன்சில்களின் பதவி காலம் முடிகிறது. பெரும்பாலான பேரூராட்சி, நகராட்சி, மாநகராட்சிகளில் தி.மு.க., வைச் சேர்ந்தவர்கள் தலைவர்களாக உள்ளனர். வரும் உள்ளாட்சி தேர்தலுக்கான பணிகள் நடந்து வருகிறது. சட்டசபை தேர்தலைப்போல் உள்ளாட்சி தேர்தல்களிலும் வெற்றி பெற வேண்டும் என்று அ.தி.மு.க., முடிவு செய்துள்ளது. இதன் ஒரு கட்டமாக, கடந்த ஐந்து ஆண்டுகளில் உள்ளாட்சிகளில் தி.மு.க., வை சேர்ந்த தலைவர்கள் செய்த முறைகேடுகள் குறித்து விசாரணை நடத்த அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.