/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்க வருவாய் அளவில் நிலங்கள் பிரிப்புபயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்க வருவாய் அளவில் நிலங்கள் பிரிப்பு
பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்க வருவாய் அளவில் நிலங்கள் பிரிப்பு
பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்க வருவாய் அளவில் நிலங்கள் பிரிப்பு
பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்க வருவாய் அளவில் நிலங்கள் பிரிப்பு
ADDED : அக் 07, 2011 10:53 PM
ராமநாதபுரம் : பயிர் காப்பீட்டு இன்சூரன்ஸ் வழங்குவதற்கு ஏதுவாக, நிலங்கள் வருவாய் அளவில் பிரிக்கப்பட உள்ளன.
தேசிய வேளாண் காப்பீட்டுத் திட்டத்தில் பயிர் காப்பீடு செய்துள்ள விவசாயிகளுக்கு இழப்பீட்டு தொகை வழங்கப்பட்டு வருகிறது. பயிர்கள் சேதம் ஏற்படுவதை வேளாண் துறை அதிகாரி, வி.ஏ.ஓ.,க்கள், கூட்டுறவு சங்க சார்பதிவாளர்கள், கள அலுவலர்கள் அடங்கிய குழுவினர் கண்காணித்து, இழப்பீட்டுக்கு தகுந்த நிவாரணத்தை பெற அரசுக்கு பரிந்துரை செய்கின்றனர். இந்த பரிந்துரையின்போது, நிலங்கள் பிர்கா அளவில் பிரிக்கப்படுவதால், ஒரு சிலரின் நிலங்கள் இரண்டு பிர்க்காவுக்குள் அடங்குகின்றன. இதனால் அவர்கள் பயிர் இன்சூரன்ஸ் பெற முடியவில்லை. ஒரே கிராமத்தில் ஒருவருக்கு கிடைத்து, மற்றவருக்கு கிடைக்காத நிலையால் விவசாயிகளுக்கும், அதிகாரிகளுக்கும் இடையே பிரச்னை ஏற்படுகிறது. இந்நிலையை தடுக்க, பயிர்காப்பீட்டு இன்சூரன்ஸ் செய்துள்ள பகுதிகள், வருவாய் கிராம அளவில் பிரிக்க கணக்கெடுப்பு நடத்தப்பட்டு வருகிறது.


