ADDED : செப் 29, 2011 01:16 AM
ஈரோடு: பெருந்துறை மகாராஜா கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், ஆடை
வடிவமைப்பு துறை சார்பில், சரும பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு பற்றிய
செய்முறை விளக்க நிகழ்ச்சி துவங்கியது.நாளை வரை மூன்று நாட்கள் நடக்கும்
பயிற்சியை, கல்லூரி தாளாளர் தரணிதரன் துவக்கி வைத்தார்.
ஈரோடு அழகுக் கலை
நிபுணர் சவிதா பயிற்சி அளித்தார். மேக்கப், ஃபேசியல், திரெட்டிங், ஹேர்
டிரசிங், மெகந்தி, ஃபிளவர் அரேன்ஞ்மென்ட், பிளீச்சிங் உள்ளிட்ட பல பயிற்சி
அளிக்கப்படுகிறது.


