/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்களுக்காக உழைக்கும் வேட்பாளர்களை ஆதரியுங்கள் : அமைச்சர் கோகுல இந்திராமக்களுக்காக உழைக்கும் வேட்பாளர்களை ஆதரியுங்கள் : அமைச்சர் கோகுல இந்திரா
மக்களுக்காக உழைக்கும் வேட்பாளர்களை ஆதரியுங்கள் : அமைச்சர் கோகுல இந்திரா
மக்களுக்காக உழைக்கும் வேட்பாளர்களை ஆதரியுங்கள் : அமைச்சர் கோகுல இந்திரா
மக்களுக்காக உழைக்கும் வேட்பாளர்களை ஆதரியுங்கள் : அமைச்சர் கோகுல இந்திரா
ADDED : அக் 14, 2011 10:53 PM
இளையான்குடி : இளையான்குடி மக்களுக்கு அரசு நலத்திட்டங்கள் தொடர்ந்து கிடைக்க பாடுபட்டு கொண்டிருக்கும் அ.தி.மு.க., தலைவர் வேட்பாளர் அன்வர்,வார்டு உறுப்பினர்களை ஆதரியுங்கள் என அமைச்சர் கோகுல இந்திரா பேசினார்.
இளையான்குடி பேரூராட்சி தலைவர் பதவிக்கு அ.தி.மு.க., சார்பில் அன்வர், வார்டு உறுப்பினர்களுக்கு ஆதரவாக சுற்றுலாத்துறை அமைச்சர் கோகுல இந்திரா இளையான்குடியில் கண்மாய்கரை , சாலையூர் , புதூர் பகுதிகளில் பிரசாரம் செய்தார். அவர் பேசுகையில் 'தமிழகத்தை முதன்மை மாநிலமாக்க முதல்வர் பாடுபட்டு வருகிறார். முதல்வரால் கொண்டு வரப்படும் திட்டங்கள் அனைத்தும் உள்ளாட்சி பிரதிநிதிகள் மூலமாகவே மக்களை சென்றடையும்.
அ.தி.மு.க., வேட்பாளர்கள் தான் மக்களோடு மக்களாக இருந்து பணியாற்றுவார்கள். முதல்வர் அறிவிக்கும் நலத்திட்டங்கள் அனைத்தும் மக்களுக்கு கிடைக்கவும் , இளையான்குடியை தன்னிறைவு பெற்ற பேரூராட்சியாக உருவாக்கவும், அ.தி.மு.க.,விற்கு ஆதரவு தாருங்கள். இவ்வாறு பேசினார். மாவட்ட செயலாளர் முருகானந்தம் மற்றும் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.


