ராகிங் தடுப்பு தனி பிரிவு துவக்கம்
ராகிங் தடுப்பு தனி பிரிவு துவக்கம்
ராகிங் தடுப்பு தனி பிரிவு துவக்கம்
ADDED : ஆக 29, 2011 11:43 PM
தர்மபுரி : தர்மபுரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் ராகிங் மற்றும் ஈவ் டீசிங் குற்றங்களை தடுக்கவும், கண்காணிக்கவும் தனி பிரிவு துவக்கப்பட்டுள்ளது.
தர்மபுரியில் மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு, தனியார் கலைக்கல்லூரிகள் மற்றும் தனியார் பள்ளிகள் உள்ளன. தினசரி மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளிலிருந்து தர்மபுரிக்கு அதிகமான மாணவ, மாணவியர்கள் வருகின்றனர். வெளிநாடு மற்றும் வட மாநிலங்களை சேர்ந்த மாணவர்கள் தர்மபுரி உட்கோட்டத்திலுள்ள கல்லூரிகளில் படிக்கின்றனர்.
மாணவர்களின் பாதுகாப்புக்காகவும் பொது இடங்களில் ஈவ் டீசிங் போன்ற பிரச்னைகளை கட்டுப்படுத்தவும் தர்மபுரி டி.எஸ்.பி., அலுவலகத்தில் ஈவ் டீசிங் மற்றும் ராகிங் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அமைக்கப்பட்டுள்ளது.
தர்மபுரி டி.எஸ்.பி., சந்தானபாண்டியன் கூறியதாவது: கல்லூரிகளில் ராகிங் கொடுமைகள் இருந்தாலும் மற்றும் பொது இடங்களில் ஈவ்டீசிங் போன்ற பிரச்னைகள் இருந்தாலும் தனிப்பிரிவுக்கு 04342- 230989, 04342- 264999 என்ற டெலிஃபோன் எண்களில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவிக்கலாம். இதைத்தவிர தீதீதீ.tணணீணிடூடிஞிஞு.ஞ்ணிதி.டிண என்ற இணையத்தளத்தில் தங்களின் புகார்களை பதிவு செய்யலாம். புகார் தருபவர்களின் பெயர் மற்றும் விபரங்கள் பாதுகாக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.


