/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கீழ்மலை உள்ளாட்சிகள்: அ.தி.மு.க., வுக்கு சவால்கீழ்மலை உள்ளாட்சிகள்: அ.தி.மு.க., வுக்கு சவால்
கீழ்மலை உள்ளாட்சிகள்: அ.தி.மு.க., வுக்கு சவால்
கீழ்மலை உள்ளாட்சிகள்: அ.தி.மு.க., வுக்கு சவால்
கீழ்மலை உள்ளாட்சிகள்: அ.தி.மு.க., வுக்கு சவால்
ADDED : அக் 04, 2011 09:47 PM
தாண்டிக்குடி:தாண்டிக்குடி கீழ்மலைப் பகுதியை தி.மு.க., பிடியிலிருந்து கைப்பற்ற, அ.தி.மு.க., போராட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.கடந்த தேர்தலில் தாண்டிக்குடியை தவிர்த்து ஏனைய 6 ஊராட்சிகள், ஒரு பேரூராட்சியை தி.மு.க., கைப்பற்றியது.
சட்டசபை தேர்தலிலும், அ.தி.மு.க., வுக்கு எதிர்பார்த்த அளவு ஓட்டு விழாமல், பின்னடைவு ஏற்பட்டது. உள்ளாட்சி தேர்தலில் அ.தி.மு.க., தரப்பில் மக்களிடம் செல்வாக்கு பெற்ற வேட்பாளர்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளனர். சில இடங்களில் கோஷ்டி பூசல் ஏற்பட்டு உள்ளடி வேலைகளில் ஈடுபடவும் தயாராகி விட்டனர். இத்தேர்தல் அ.தி.மு.க., விற்கு கடும் சவாலை ஏற்படுத்தியுள்ளது. வெற்றி பெற வாய்ப்புள்ள இடங்களிலும், செல்வாக்கு பெற்ற சுயேச்சைகள் களம் இறக்கி, அ.தி. மு.க., வுக்கு சிக்கலை ஏற்படுத்தியுள்ளனர். தி.மு.க., வசம் உள்ள இடங்களில் அ.தி.மு.க., ஆளுமை ஏற்படுமா அல்லது உள்ளடிவேலைகளால் சரிவை சந்திக்குமா? என்ற பதைபதைப்பில் தொண்டர்கள் உள்ளனர்.


