/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/புதிய தொழில் நுட்பத்தில் 1.70 லட்சம் பழக்கன்றுகள்புதிய தொழில் நுட்பத்தில் 1.70 லட்சம் பழக்கன்றுகள்
புதிய தொழில் நுட்பத்தில் 1.70 லட்சம் பழக்கன்றுகள்
புதிய தொழில் நுட்பத்தில் 1.70 லட்சம் பழக்கன்றுகள்
புதிய தொழில் நுட்பத்தில் 1.70 லட்சம் பழக்கன்றுகள்
ADDED : ஆக 25, 2011 11:34 PM
சிவகங்கை : விவசாயிகளுக்கு புதிய தொழில் நுட்பத்தின் மூலம் உற்பத்தி செய்யப்பட்ட பழக்கன்றுகள் மானியத்துடன் வழங்கப்படும் என வேளாண்மை துறை தெரிவித்துள்ளது.
தோட்டக்கலை துறை துணை இயக்குனர் இருளப்பன் அறிக்கை: மாவட்டத்தில் பழ மரங்கள் சாகுபடி 2 ஆயிரம் எக்டேரிலும்,காய்கறிகள் 750 எக்டேர்,மலர் சாகுபடி 200 எக்டேரிலும் சாகுபடி செய்யப்படவுள்ளது. இந்த ஆண்டு தேசிய தோட்டக்கலை இயக்கத்தின் கீழ் மாமரம், பலா, பப்பாளி, எலுமிச்சை, முந்திரி, மல்லிகை உள்ளிட்டவைகளுக்கு மானிய விலையில் விதைகள் வழங்கப்படவுள்ளன. இதற்கு தேவையான வீரிய ஒட்டு பழக்கன்றுகள் தேவகோட்டை மற்றும் நேமத்தில் உள்ள அரசு தோட்டக்கலை பண்ணைகளில் உற்பத்தி செய்யப்பட்டு வருகின்றன. ஒட்டு மரங்கள் உற்பத்தியில் புதிய தொழில் நுட்பமாக மென்தண்டு ஒட்டு கட்டுதல் முதல் முறையாக கடைபிடிக்கப்பட்டுள் ளது.
இதனால் மாங்கன்றுகள் விரைவாக வளர்ந்து கூடுதல் மகசூல் தரும். இந்த ஆண்டு தேவகோட்டை பண்ணையில் 50 ஆயிரம் கன்றுகளும், நேமம் பண்ணையில் 1 லட்சத்து 20 ஆயிரம் ஒட்டுகன்றுகளும் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. மாவட்டத்தில் எலுமிச்சை, பப்பாளி விவசாயத்திற்கு மானியம் வழங்கப்படுகிறது. விவசாயிகள் தங்களது வட்டார தோட்டக்கலைத்துறை அலுவலர்கள் மூலம் பெற்று சாகுபடி செய்து பயனடையலாம் என தோட்டக்கலை துணை இயக்குனர் தெரிவிக்கிறார்.


