/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பழங்களை பாதுகாக்கும் நானோ பிலிம் தொழில்நுட்பம் :வேளாண் கருத்தரங்கில் தகவல்பழங்களை பாதுகாக்கும் நானோ பிலிம் தொழில்நுட்பம் :வேளாண் கருத்தரங்கில் தகவல்
பழங்களை பாதுகாக்கும் நானோ பிலிம் தொழில்நுட்பம் :வேளாண் கருத்தரங்கில் தகவல்
பழங்களை பாதுகாக்கும் நானோ பிலிம் தொழில்நுட்பம் :வேளாண் கருத்தரங்கில் தகவல்
பழங்களை பாதுகாக்கும் நானோ பிலிம் தொழில்நுட்பம் :வேளாண் கருத்தரங்கில் தகவல்
ADDED : ஆக 25, 2011 11:28 PM
கோவை : இந்தியாவில் அறுவடைக்கு பின் கெட்டுப்போகும் 30 சதவீத பழங்கள்
மற்றும் காய்கறிகளின் மூலம், ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு
ஏற்படுவதாக, கருத்தரங்கில் தெரிவிக்கப்பட்டது. கோவை தமிழ்நாடு வேளாண்
பல்கலை நானோ அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்துறை, கனடா கல்ப் பல்கலை கழகம்,
இலங்கை தொழில் நுட்பக்கழகம், அரசு சாரா நிறுவனம் மைரடா போன்றவை இணைந்து
நானோ பிலிம் நுட்பம் குறித்த ஆராய்ச்சியில் ஈடுபட்டு
வருகிறது.இத்திட்டத்தின் இரண்டாம் கட்டமாக, தமிழ்நாடு வேளாண் பல்கலையில்
நானோ அறிவியல் மற்றும் தொழில் நுட்பத்துறையின் சார்பில் 'நானோ பிலிம்
தொழில் நுட்பம் மூலம் பழங்களை பாதுகாப்பது' குறித்த பன்னாட்டு கருத்தரங்கம்
நடந்தது. இயற்கை வள மேலாண்மை இயக்குநர், நானோ அறிவியல் மற்றும்
தொழில்நுட்ப துறை தலைவர் சுப்ரமணியன் பேசியதாவது: பழங்கள் மற்றும்
காய்கறிகளின் உற்பத்தி திறன் அதிகமாக உள்ளது. ஆனால், உட்கொள்ளும் அளவு
குறைவாக உள்ளது. பழங்கள், காய்கறிகளின் அறுவடைக்கு பின் பாதுகாப்பு முறைகள்
குறைவாக இருப்பதால், ஆண்டுக்கு 40 ஆயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்படுகிறது.
இப்பெரிய இழப்பை நானோ பிலிம் தொழில்நுட்பம் மூலம் தடுக்க முடியம். நானோ
பிலிமில் ஹெக்ஸனல் என்ற பொருளை உள்ளடக்கிய பைகளில் பழங்கள், காய்கறிகளை
சேமிக்கும்போது 30 முதல் 40 நாட்கள் வரை கெடாமல் பாதுகாக்க முடியும்.
இத்திட்டத்திக்கு ஒதுக்கப்பட்ட 6.5 கோடி ரூபாயில், தமிழ்நாடு பல்கலைக்கு
3.5 கோடி ரூபாய் ஒதுக்கப்படவுள்ளது. இத்திட்டத்தின் பரிசோதனை முயற்சியாக
மாம்பழங்களில் சோதனையிடப்படுகிறது. பின் மலர்கள், விதைகள், பழங்களில்
சோதனையிடப்படும். இத்திட்டத்தை விவசாயிகளிடம் உரிய முறையில் எடுத்துச்
சென்று வெற்றி பெற்றால், நானோ பிலிம் தொழில் நுட்பம் முயற்சி அர்த்தத்தை
பெறுகிறது, என்றார். தமிழ்நாடு வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி
பேசியதாவது:
அறுவடைக்கு பின் வீணாகும் காய்கறிகள், பழங்களின் அளவை குறைத்திட, 150 கோடி
ரூபாய் மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் அறுவடை பின்செய் நிறுத்தி
மையங்கள் துவங்குவதற்காக கருத்துரு, 12வது ஐந்தாண்டு திட்டத்திக்கு
அனுப்பப்பட்டுள்ளது. விவசாயிகளுக்கு பயனுள்ள இத்திட்டத்தில், எந்தவித
கெடுதல் இல்லாமல் உருவாக்கப்பட வேண்டும் இவ்வாறு, துணைவேந்தர் பேசினார்.