/உள்ளூர் செய்திகள்/ராமநாதபுரம்/டிவி'யை தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: முதன்மை கல்வி அலுவலர்டிவி'யை தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: முதன்மை கல்வி அலுவலர்
டிவி'யை தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: முதன்மை கல்வி அலுவலர்
டிவி'யை தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: முதன்மை கல்வி அலுவலர்
டிவி'யை தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்: முதன்மை கல்வி அலுவலர்
ADDED : ஆக 25, 2011 11:30 PM
ராமேஸ்வரம் : 'நாளிதழ்களில் தேவையான செய்திகளை படிக்க வேண்டும்.
'டிவி'யை
தவிர்த்தால் அதிக மதிப்பெண் பெறலாம்,' என முதன்மை கல்வி அலுவலர்
ராதாகிருஷ்ணன் பேசினார். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 தேர்வில் அதிக
மதிப்பெண் பெறுவதற்காக ராமேஸ்வரம் அரசு மேல்நிலைப்பள்ளியில்
பெற்றோர்-ஆசிரியர்-மாணவர் சந்திப்புக் கூட்டம் நடந்தது. தலைமை ஆசிரியர்
லெட்சுமணசுவாமி தலைமை வகித்தார். பெற்றோர் ஆசிரியர் சங்க தலைவர் கருணாகரன்
முன்னிலை வகித்தார். நாட்டுநலப்பணி திட்ட அலுவலர் ஜெயகாந்தன் வரவேற்றார்.
முதன்மை கல்வி அலுவலர் ராதாகிருஷ்ணன் பேசியதாவது: பெற்றோர், வீட்டு
பிரச்னையை பேசியும், எதிர்மறையான கருத்துக்களை கூறி குழந்தைகளை திசை
திருப்பக்கூடாது. படிப்பதற்கு தேவையான பொருட்களை கேட்டால் உடனே வாங்கி
கொடுக்க வேண்டும். ஆசிரியர்களை அணுகி பிள்ளைகளின் படிப்பு குறித்து
விசாரிக்க வேண்டும். படிப்பில் பின்தங்கிய மாணவர்களிடம் கூடுதல் கவனம்
செலுத்த வேண்டும். 'டிவி'யை தவிர்த்து, நாளிதழ்களில் வரும் தேவையான
செய்திகளை மட்டும் மாணவர்கள் படிக்க வேண்டும். படிக்கும்போது ஏற்படும்
சந்தேகங்களை அப்போதே ஆசிரியர்களிடம் கேட்டு தெரிந்து அதிக கவனம் செலுத்தி
படிக்க வேண்டும், என்றார்.


