"சாப்ட்வேரில்' அசத்தும் பள்ளி மாணவன்
"சாப்ட்வேரில்' அசத்தும் பள்ளி மாணவன்
"சாப்ட்வேரில்' அசத்தும் பள்ளி மாணவன்
ADDED : அக் 03, 2011 11:39 PM

சென்னை:''உலகளவில் கணினி துறையில் சாதனை புரிய வேண்டும் என்பது என் இலக்கு,'' என, பள்ளி மாணவன் அவினாஷ் மகாராஜா கூறியுள்ளார்.இது குறித்து, அவினாஷ் மகாராஜா, நிருபர்களிடம் கூறியதாவது:திருநெல்வேலி மாவட்டம், பாளையங்கோட்டை என் சொந்த ஊர். நான்காவது படிக்கும்போது, முதன் முறையாக 'சாப்ட்வேர்' எழுத கற்றுக் கொண்டேன். 'சாப்ட்வேர்' உருவாக்கியதை தொடர்ந்து 'மைக்ரோசாப்ட்' நிறுவனத்தின் 'ஆன்-லைன்' தேர்வுகளில் பங்கேற்றேன். இது வரை 32 தேர்வுகளில் வெற்றி பெற்றுள்ளேன்.
என் திறமையைப் பாராட்டி, 'மைக்ரோ சாப்ட்' நிறுவனம், 'புரோபோசனல் டெவலப்பர்' என்ற விருதினை வழங்கியுள்ளது. மேலும், 'ஆரக்கிள்' நிறுவனம் நடத்திய தேர்வுகளிலும் பங்கேற்று வெற்றி பெற்றிருக்கிறேன். அமெரிக்கா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகளிலிருந்து பலர் என்னிடம் கணினி சம்பந்தமான பல நுணுக்கங்களை கற்று வருகின்றனர். உலகளவில், இத்துறையில் சாதனை புரிய வேண்டும் என்பதே என் இலக்கு. தற்போது, பாளையங்கோட்டை ரோஸ்மேரி மாடல் மெட்ரிக் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வருகிறேன்.இவ்வாறு அவினாஷ் மகாராஜா கூறினார்.
மாணவரின் தந்தை டாக்டர் ரத்னவேல் கூறும்போது, 'மைக்ரோ சாப்ட்', 'ஆரக்கிள்', 'லினக்ஸ்' போன்ற நிறுவனங்கள் நடத்திய ஆன்-லைன் தேர்வுகளில், இன்ஜினியரிங் மாணவர்களை மிஞ்சும் அளவுக்கு என் மகன் வெற்றி பெற்றுள்ளான். தற்போது, 14 வயது நிரம்பிய அவனுக்கு, 'இன்ஜினியரிங்' பட்டப்படிப்பில் சேர, வயது வரம்பை தளர்த்த வேண்டும். இளம் வயதில் 'இன்ஜினியரிங்' பட்டம் பெற்று, அவனது பெயர், 'கின்னஸ்' புத்தகத்தில் வர வேண்டும்' என்றார். அவினாஷின் தாய் கலையரசி உடனிருந்தார்.


