Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/மதுரை/சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவச பொருள் வினியோகம் : அ.தி.மு.க., மீது காங்., புகார்

சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவச பொருள் வினியோகம் : அ.தி.மு.க., மீது காங்., புகார்

சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவச பொருள் வினியோகம் : அ.தி.மு.க., மீது காங்., புகார்

சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவச பொருள் வினியோகம் : அ.தி.மு.க., மீது காங்., புகார்

ADDED : அக் 04, 2011 12:44 AM


Google News

மதுரை : 'உள்ளாட்சி தேர்தலையொட்டி, அ.தி.மு.க., வினர் மகளிர் சுயஉதவிக்குழுக்கள் மூலம் இலவச பொருள் வினியோகம் செய்வதாக,'' காங்., குற்றம்சாட்டியது.மதுரை மாநகராட்சி தேர்தல் காங்கிரஸ் ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் நகர் தலைவர் தெய்வநாயகம் தலைமையில் நடந்தது.

முன்னாள் எம்.பி., ராம்பாபு, முன்னாள் எம்.எல்.ஏ., ராஜேந்திரன், மாவட்ட தலைவர் தேவராஜன் பங்கேற்றனர். மேயர், வார்டு உறுப்பினர்கள் வெற்றிக்கு பாடுபட வேண்டும். தேர்தல் ஆணையம் விதிப்படி குறிப்பிட்ட வாகனங்களில் வராத அ.தி.மு.க.,வினர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பாரபட்சமின்றி தேர்தலை நடத்த வேண்டும்.உள்ளாட்சி தேர்தலையொட்டி ஆளும்கட்சியான அ.தி.மு.க., மகளிர் சுயஉதவிக் குழுக்களை பயன்படுத்தி இலவச பொருட்களை வழங்கி வருகிறது. இதை தடுத்து நிறுத்த வேண்டும். வாக்காளர்கள் அச்சமின்றி வாக்களிக்க தகுந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்பது போன்ற தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. செய்தி தொடர்பாளர் சையதுபாபு நன்றி கூறினார்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us