/உள்ளூர் செய்திகள்/நாமக்கல்/நில அபகரிப்பில் கைதான சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஜாமீன்நில அபகரிப்பில் கைதான சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஜாமீன்
நில அபகரிப்பில் கைதான சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஜாமீன்
நில அபகரிப்பில் கைதான சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஜாமீன்
நில அபகரிப்பில் கைதான சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபருக்கு ஜாமீன்
ADDED : அக் 08, 2011 01:26 AM
நாமக்கல்: நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்ட நகராட்சி தி.மு.க.,
சேர்மன், ரியல் எஸ்டேட் அதிபரும், திருச்செங்கோடு குற்றவியல் நடுவர்
நீதிமன்ற மாஜிஸ்திரேட் உத்தரவின் பேரில், நேற்று நிபந்தனை ஜாமீனில் விடுதலை
செய்யப்பட்டனர்.
திருச்செங்கோடு, யூ.மேட்டுப்பாளையத்தை சேர்ந்தவர்
தில்லைஈஸ்வரி. அவர் அளித்த புகாரின் பேரில், திருச்செங்கோடு நகராட்சி
தி.மு.க., சேர்மன் நடேசன், ரியல் எஸ்டேட் அதிபர் ஓம்சக்தி சண்முகம்
ஆகியோர், கடந்த 1ம் தேதி நில அபகரிப்பு வழக்கில் போலீஸாரால் கைது
செய்யப்பட்டனர். இருவரும் ஜாமீன் கோரி, திருச்செங்கோடு குற்றவியல் நடுவர்
நீதிமன்றத்தில் மனு அளித்தனர். அந்த மனு மீதான விசாரணை, நேற்று
மாஜிஸ்திரேட் ஆபிரகாம் லிங்கன் முன்னிலையில் நடந்தது. வழக்கை விசாரித்த
மாஜிஸ்திரேட் ஆபிரகாம்லிங்கன், இருவருக்கும் நிபந்தனை ஜாமீன் விதித்து
உத்தரவிட்டார். அதன்படி, இருவரும் நாள்தோறும் மாவட்ட பொருளாதார
குற்றப்பிரிவு போலீஸில், காலை 10 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட வேண்டும்.


