/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து : 2 பேர் பலி; இருவர் காயம்சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து : 2 பேர் பலி; இருவர் காயம்
சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து : 2 பேர் பலி; இருவர் காயம்
சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து : 2 பேர் பலி; இருவர் காயம்
சாத்தூர் பட்டாசு ஆலையில் விபத்து : 2 பேர் பலி; இருவர் காயம்
ADDED : அக் 03, 2011 10:56 PM
சாத்தூர் : சாத்தூர் அருகே பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட வெடி விபத்தில், இரண்டு பேர் பலியாகினர்.
காயமடைந்த இருவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டனர். சாத்தூர் பெரியார் நகரை சேர்ந்தவர் கேசவன். இவருக்கு சொந்தமான நியூ இந்தியன் நேஷனல் பட்டாசு தொழிற்சாலை சாத்தூர் அருகே பாறை பட்டியில் உள்ளது. இங்கு சுற்று பகுதியை சேர்ந்த 50 க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். நேற்று காலை 30 க்கும் மேற்பட்ட அறைகளில், பட்டாசு தயாரிப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். காலை 10.20 க்கு தொழிலாளர்கள் பலரும் டீ சாப்பிட சென்ற நிலையில், வல்லம் பட்டியை சேர்ந்த மணி,35, என்பவர் வேலை செய்த அறையில் வெடி விபத்து ஏற்பட்டது. இதன் தீ வல்லம்பட்டி அந்தோணிராஜ் பணியாற்றிய அறைக்கும் பரவியது. இருவரும் சம்பவ இடத்தில் பலியாகினர். இருவர் உடலையும், சாத்தூர் தீயணைப்பு மீட்பு துறையினர்,கட்டட இடிபாடுகளிலிருந்து மீட்டனர்.
வெடி விபத்தில், மார்க்க நாதபுரத்தை சேர்ந்த அஸ்வினி,22, மங்கையர்கரசி,35, ஆகிய இரு பெண்களும் காயமடைந்தனர். இவர்கள் அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். ''பேன்சி வெடிக்காக, கலர் மணிமருந்து அடைப்பில் தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்த போது, உராய்வு ஏற்பட்டு, வெடிவிபத்து ஏற்பட்டதாக '' போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. சின்னையா டி.எஸ்.பி.,முனுசாமி ஆர்.டி.ஓ., சாத்தூர் தாசில்தார் பாலசுப்பிரமணியன் மற்றும் அதிகாரிகள் விசாரித்தனர்.


