/உள்ளூர் செய்திகள்/விருதுநகர்/அ.தி.மு.க., குறித்து துண்டு பிரசுரம்: இரண்டு பேர் கைதுஅ.தி.மு.க., குறித்து துண்டு பிரசுரம்: இரண்டு பேர் கைது
அ.தி.மு.க., குறித்து துண்டு பிரசுரம்: இரண்டு பேர் கைது
அ.தி.மு.க., குறித்து துண்டு பிரசுரம்: இரண்டு பேர் கைது
அ.தி.மு.க., குறித்து துண்டு பிரசுரம்: இரண்டு பேர் கைது
ADDED : அக் 03, 2011 10:56 PM
அருப்புக்கோட்டை : அ.தி.மு.க.
வை பற்றி துண்டு பிரசுரம் வெளியிட்ட இருவரை போலீசார் கைது செய்தனர். அருப்புக்கோட்டை தி.மு.க., 6 வது வார்டு செயலர் மைதீன் பாட்சா,54. இவரது மகள் செய்யது அலி பாத்திமா தி.மு.க., சார்பாக நகராட்சி கவுன்சிலர் பதவிக்கு 6 வது வார்டில் போட்டியிடுகிறார். மைதீன் பாட்சாவும், அவருடைய உறவினர் காஜா மைதீனும் அ.தி.மு.க., மற்றும், தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் பற்றி துண்டு பிரசுரம் வெளியிட்டுள்ளனர். அதில், கடந்த சட்ட சபை தேர்தலில் அ.தி.மு.க., விற்கு ஓட்டு போட்டால் 3000 ரூபாய் மதிப்புள்ள பொருட்கள் தருவதாக கூறி ஒரு டோக்கன் கொடுத்து, ரேஷன் கார்டு ஜெராக்ஸ் நகலை பெற்று சென்றனர். ஆனால், ஜெயித்த பிறகு பொருட்கள் வழங்காமல் ஏமாற்றி விட்டனர். மீண்டும் இந்த தேர்தலுக்கு பொய் சொல்லி ஓட்டு கேட்க வருகின்றனர். பொதுமக்களே உஷாராக இருங்கள்,'' என, குறிப்பிடபட்டுள்ளது. த.மு.மு.க., நகர தலைவர் இப்றாகிம் பாதுஷா டவுன் ஸ்டேஷனில் கொடுத்த புகாரின்படி, போலீசார் மைதீன் பாட்ஷா அவரது உறவினர் காஜா மைதீனை கைது செய்தனர்.


