/உள்ளூர் செய்திகள்/தேனி/வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வேட்பாளர் எம்.வீரமணி வாக்குறுதிவார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வேட்பாளர் எம்.வீரமணி வாக்குறுதி
வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வேட்பாளர் எம்.வீரமணி வாக்குறுதி
வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வேட்பாளர் எம்.வீரமணி வாக்குறுதி
வார்டு மக்களுக்கு நலத்திட்ட உதவி வேட்பாளர் எம்.வீரமணி வாக்குறுதி
ADDED : அக் 13, 2011 09:54 PM
தேனி : தேனி 5வது வார்டு மக்களுக்கு அரசின் அனைத்து நலத்திட்ட உதவிகளையும் பெற்றுத்தருவேன் என வேட்பாளர் வீரமணி உறுதியளித்துள்ளார்.
தேனி நகராட்சி 5வது வார்டில் தற்போது கவுன்சிலராக இருந்து சாதனைகளை படைத்தவர் எம்.வீரமணி. மீண்டும் அ.தி.மு.க., சார்பில் இரட்டை இலை சின்னத்தில் போட்டியிடுகிறார். வீரமணி கூறியதாவது: தாலிக்கு தங்கம், திருமண நிதி உதவி, ஊனமுற்றோர், முதியோர், ஆதரவற்றோர், விதவை உதவித்தொகை, மிக்ஸி, கிரைண்டர், மின்விசிறி, பசுமாடு, ஆடு, இலவச லேப்டாப் உட்பட எல்லா நலத்திட்டங்களையும் மக்களுக்கு பெற்றுத்தருவேன். மருதையன் தெரு, அபிராமி ஸ்டோர் பின்புறம் பாலம் அமைத்தது, சுந்தரராஜ் தெருவில் அகலமான ரோடு அமைத்தது, காமாட்சி தெருவில் அடிகுழாய் அமைத்து மின்வசதி செய்தது, மருதையன் தெரு, ஜில்லமன் தெரு, சுந்தர்ராஜ் தெருவில் தண்ணீர் வசதி செய்தது, செங்கோல் தெரு, தொத்தமன் தெரு, வீராச்சாமி தெரு, மூர்த்தி தெருவில் சிமெண்ட் ரோடு அமைத்தது, பாலித்தெரு, முத்துப்பாலித்தெரு, மூர்த்தி தெருவில் உள்ள பழுதடைந்த மோட்டாரை மாற்றி மின் மோட்டார் பொறுத்துவது போன்ற பல சாதனைகளை செய்துள்ளேன். வைகை அணை குடிநீர் திட்டம் மூலம் தினமும் குடிநீர் சப்ளை செய்தல் போன்ற பணிகளை செய்வேன்,'என்றார்.


