/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/கொக்கிரகுளம் பாங்க் கிளையில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்புகொக்கிரகுளம் பாங்க் கிளையில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு
கொக்கிரகுளம் பாங்க் கிளையில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு
கொக்கிரகுளம் பாங்க் கிளையில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு
கொக்கிரகுளம் பாங்க் கிளையில் அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு
ADDED : ஆக 28, 2011 01:12 AM
திருநெல்வேலி : கொக்கிரகுளத்தில் உள்ள தேசியமயமாக்கப்பட்ட பாங்கின் கிளையில் நேற்று மாலை தொடர்ந்து அபாய மணி ஒலித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
கொக்கிரகுளத்தில் தேசிய மயமாக்கப்பட்ட பாங்கின் வேளாண் வளர்ச்சி கிளை அமைந்துள்ளது.
இக் கிளையில் நேற்று மாலை பாங்க் ஊழியர்கள் பெரும்பாலானவர்கள் வீட்டிற்கு சென்ற நிலையில் திடீரென 3முறை அபாய மணி ஒலித்தது. இதனால் வாகனத்தில் சென்று கொண்டிருந்தவர்கள் பாங்கில் அசம்பாவிதம் ஏதேனும் நடந்து விட்டதோ என கருதி பாங்கின் முன் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து பாங்க் அலுவலர் ஒருவர் கூறியதாவது; பாங்க் அபாய மணியில் திடீரென கோளாறு ஏற்பட்டதால் நேற்று மாலை தொடர்ந்து அபாய மணி ஒலித்தது. அபாய மணியில் ஏற்பட்ட கோளாறு உடனடியாக சரி செய்யப்பட்டது. பாங்கில் வேறு எந்த பிரச்னையும் இல்லை என்றார்.


