ADDED : ஜூலை 29, 2011 01:42 AM
மதுரை : பாலமேடு அரசு மேல்நிலைப் பள்ளியில் இலக்கிய மன்ற துவக்கவிழா நடந்தது.ஆசிரியை பியூலா மெர்ஸிபாய் வரவேற்றார்.
தலைமையாசிரியை பகவதி வரவேற்றார். உதவித் தலைமையாசிரியை ஜகிதா முன்னிலை வகித்தார். பேராசிரியர் ராஜமாணிக்கம், அதிக மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்கினார். மின்வாரிய கணக்கு அலுவலர் சுந்தரராஜன், உதவித் தலைமையாசிரியைகள் சுகுணா, புஷ்பராணி பங்கேற்றனர். ஆசிரியை கவுசல்யா நன்றி கூறினார். ஆசிரியர் சங்கரலிங்கம் தொகுத்து வழங்கினார்.


