/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்
கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்
கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்
கான்ட்ராக்ட், கமிஷன்: நல்லகண்ணு ஆதங்கம்
ADDED : அக் 11, 2011 01:37 AM
வேடசந்தூர் : ''துப்புரவு பணியில் கூட கான்ட்ராக்ட் விட்டு, மத்திய, மாநில
அரசுகள் கமிஷன் பெறுகின்றன,'' என, இந்திய கம்யூ., தேசிய கட்டுப்பாட்டு குழு
தலைவர் நல்லகண்ணு பேசினார்.
வேடசந்தூர் பேரூராட்சி தலைவர் பதவி வேட்பாளர்
சந்திரசேகரன், வார்டு வேட்பாளர்களை ஆதரித்து அவர் பேசியது: மக்கள்
பெருக்கத்துக்கு ஏற்ப அடிப்படை சுகாதாரத்தை காக்க துப்புரவு பணியாளர்களை
நியமிக்கவில்லை. இப்பணியை கான்ட்ராக்ட் விட்டு கமிஷன் பெறுகின்றனர்.
நகராட்சி, பேரூராட்சிகளுக்கு போதிய நிதி ஒதுக்காமல்
புறக்கணிக்கப்படுகின்றன. கூடங்குளம் அணு மின் நிலையம் பற்றி அப்பகுதி
மக்களுக்கு அச்சம் உள்ளது. மக்களின் அச்சத்தை போக்கி, பிறகு பணிகளை தொடர
வேண்டும், என்றார். மாவட்ட செயலாளர் பேட்ரிக் சகாயநாத், ஒன்றிய செயலாளர்
பொன்னுச்சாமி, நிர செயலாளர் தண்டாயுதம் உட்பட பலர் உடனிருந்தனர்.


