ADDED : அக் 11, 2011 01:55 AM
விழுப்புரம் : சங்கராபுரம் பகுதியில் அமைதியான முறையில் தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்குமாறு கலெக்டரிடம் மனு அளிக்கப்பட்டது.
சங்கராபுரம் அடுத்த திருவரங்கம் கிராமத்தை சேர்ந்தவர் லட்சுமிகுமார். வக்கீல் பணி புரிகிறார். இவர் நேற்று விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் அளித்துள்ள புகார் மனு: சங்கராபுரம் ஒன்றியத்திற்குட்பட்ட ஐம்படை, திருவரங்கம், சு.கள்ளிப்பாடி கிராமங்களில் கடந்த கால தேர்தல்களின்போது சட்டம்-ஒழுங்கு பாதிப்பு நிகழ்ந்துள்ளது. பதட்டம் ஏற்பட வாய்ப்புள்ள இந்த மூன்று ஓட்டுப்பதிவு மையங்களிலும் அமைதியான முறையில் தேர்தல் நடைபெற கலெக்டர் உரிய முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இவ்வாறு வக்கீல் லட்சுமிகுமார் தனது மனுவில் கூறியுள்ளார்.


