/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மின்துறையை கண்டித்து சாலைமறியல்: சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவுமின்துறையை கண்டித்து சாலைமறியல்: சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவு
மின்துறையை கண்டித்து சாலைமறியல்: சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவு
மின்துறையை கண்டித்து சாலைமறியல்: சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவு
மின்துறையை கண்டித்து சாலைமறியல்: சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவு
ADDED : ஆக 09, 2011 02:54 AM
புதுச்சேரி : பெரிய காலாப்பட்டு மின்துறை முன் நாளை 10ம் தேதி சாலை மறியல் போராட்டம் நடத்த சிங்காரவேலர் நற்பணி மன்றம் முடிவு செய்துள்ளது.இதுகுறித்து மன்ற அமைப்பாளர் குமார் விடுத்துள்ள அறிக்கை:பெரியகாலாப்பட்டு ஆனந்தன் வீதி, சிங்காரவேலர் வீதியில் உள்ள தெருவிளக்குகள் கடந்த இரண்டு மாதத்திற்கு மேலாக எரியவில்லை.
அப்பகுதி இருள் சூழ்ந்துள்ளதால், இரவு நேரங்களில் கடற்கரை பகுதிக்கு செல்வதை பெண்கள் தவிர்த்து வருகின்றனர். இருட்டை பயன்படுத்தி சிலர் கைவரிசை காட்டி வருகின்றனர்.இது குறித்து காலாப்பட்டு மின்துறை அலுவலகத்தில் பலமுறை தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே எரியாத தெரு விளக்குகளை சரிசெய்யாவிட்டால் மக்களை திரட்டி வரும் 10ம் தேதி பெரிய காலாப்பட்டு மின்துறை முன்பு மறியல் போராட்டம் நடத்தப்படும்.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


