மழையால் கறிக்கோழி நுகர்வு சரிந்தது
மழையால் கறிக்கோழி நுகர்வு சரிந்தது
மழையால் கறிக்கோழி நுகர்வு சரிந்தது
ADDED : அக் 05, 2011 10:27 PM
பல்லடம் : தமிழகம், கேரளாவில் மழை காரணமாக, கறிக்கோழி நுகர்வு 15 சதவீதம் சரிந்துள்ளது.
தமிழகத்தில் கறிக்கோழி உற்பத்தியில் பல்லடம், உடுமலை, பொங்கலூர் அடங்கிய
பல்லடம் பகுதி முதல் இடத்தில் உள்ளது. இப்பகுதியில் இருந்து தினமும் ஆறு
லட்சம் கறிக்கோழிகள், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள், கேரளா மற்றும்
கர்நாடகத்துக்கு விற்பனைக்கு கொண்டு செல்லப்படுகின்றன.
பல்லடத்தில் உள்ள பிராய்லர் கோர்டினேசன் கமிட்டி (பி.சி.சி.,). மூலம்
தினமும் கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை நிர்ணயம் செய்யப்படுகிறது. தமிழகம்
மற்றும் கேரளாவில் கடந்த சில நாட்களாக, அவ்வப்போது மழை விட்டு, விட்டு
பெய்து வருவதால், கறிக்கோழி நுகர்வு குறைந்துள்ளது.
தமிழகம், கேரளாவில் வழக்கத்தை விட 15 சதவீதம் சரிந்துள்ளது. தற்போது,
கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை கிலோ ரூ.46 ஆக உள்ளது. இன்னும் 20 நாளில்
தீபாவளி வர உள்ளதால், அப்போது விலை உயரும் என எதிர்பார்க்கப்
படுகிறது.


