ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அறிவிப்பு
ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அறிவிப்பு
ஓட்டு எண்ணிக்கை மையங்கள் அறிவிப்பு
ADDED : அக் 08, 2011 11:07 PM
ஊட்டி : நீலகிரியில் நடக்கும் உள்ளாட்சி தேர்தலின் ஓட்டு எண்ணிக்கைக்காக 19 மையங்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளன.நீலகிரியில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் 17ம் தேதி நடக்கிறது.
இதற்கான ஓட்டு எண்ணிக்கை 21ம் தேதி நடத்தப்படுகிறது. இதில், ஊட்டி நகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை அண்ணா கலையரங்கிலும், குன்னூர் நகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை புனித அந்தோணியார் மேல்நிலை பள்ளியிலும், கூடலூர் நகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை அரசு மேல்நிலை பள்ளியிலும், நெல்லியாளம் நகராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை,பந்தலூர் புனித பிரான்சிஸ் சேவியர் துவக்கப் பள்ளியிலும் நடக்கிறது. ஓட்டுப் பதிவுக்கான மின்னணு இயந்திரங்கள் ஊட்டி, குன்னூர், கூடலூர் மற்றும் நெல்லியாளம் நகரமன்ற கூட்ட அறைகளில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன.மேலும், 11 பேரூராட்சிகளில் நடக்கும் தேர்தல்களுக்கு பின்பு, தேவர்சோலை பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை, தேவர்சோலை அரசு மேல்நிலை பள்ளியிலும், உலிக்கல் பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை திருவள்ளுவர் நகர் ஐயன் திருவள்ளுவர் படிப்பகத்திலும், ஜெகதளா பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை அங்குள்ள சமுதாய கூடத்திலும், கேத்தி பேரூராட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை, சாந்தூர் சி.எஸ்.ஐ., மேல்நிலைப்பள்ளியிலும், கீழ்குந்தா மற்றும் பிக்கட்டி பேரரூட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, மஞ்சூர் அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கோத்தகிரி பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை, அங்குள்ள அரசு ஆசிரியர் பயிற்சி நிறுவனத்திலும், நடுவட்டம், ஓவேலி பேரூராட்சிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை, கூடலூர் அரசு மேல்நிலை பள்ளியிலும், அதிகரட்டி பேரூராட்சி ஓட்டு எண்ணிக்கை, அதிகரட்டி அரசு மேல்நிலை பள்ளியிலும், சோலூர் பேரூõட்சிக்கான ஓட்டு எண்ணிக்கை, நாகர்த்தனை அரசு மேல்நிலை பள்ளியிலும் நடக்கிறது.மாவட்ட ஊராட்சி ஒன்றியங்களாக உள்ள, ஊட்டி ஊராட்சி ஒன்றிய ஓட்டுக்கள் புனித சூசையப்பர் மேல்நிலைப்பள்ளியிலும், குன்னூர் ஒன்றியத்தின் ஓட்டுக்கள், அறிஞர் அண்ணா மேல்நிலை பள்ளியிலும், கோத்தகிரி ஓன்றியத்தின் ஓட்டுக்கள், அரசு மேல்நிலைப்பள்ளியிலும், கூடலூர் ஒன்றியத்தின் ஓட்டுக்கள், அரசு மேல்நிலை பள்ளியிலும் எண்ணப்படுகிறது. இந்த மையங்களுக்கு கூடுதல் பாதுகாப்பு பணிகளும் மேற்கொள்ளப்பட உள்ளன.


