/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பாரி திருவிழாமுத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பாரி திருவிழா
முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பாரி திருவிழா
முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பாரி திருவிழா
முத்துமாரியம்மன் கோயிலில் ஆடிப்பாரி திருவிழா
ADDED : ஆக 11, 2011 01:02 AM
திருப்புத்தூர் : திருப்புத்தூர் நடுத்தெரு முத்துமாரியம்மன் கோயிலில் 181 வது ஆண்டு ஆடி பாரி திருவிழா நடந்தது.
கடந்த 2 ம் தேதியன்று அம்மனுக்கு காப்புக் கட்டி பாரிவிழா துவங்கியது.
மண்,பாத்திரக் முளைப்பாரி வளர்க்கப்பட்டன. தொடர்ந்து தினமும் அம்மனுக்கு சிறப்பு தீபாராதனை நடந்தது.நேற்று முன் தினம் இரவு அம்மனுக்கு முளைப்பாரி வைத்து சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. தொடர்ந்து நேற்று காலை கோயில்களிலிருந்து முளைப்பாரியை பெண்கள் எடுத்து வந்தனர். கோயில்களில் சுவாமியை தரிசித்து பின்னர் சீதளி குளத்திற்கு சென்று பாரியைக் கரைத்தனர்.


