ADDED : ஜூலை 14, 2011 01:11 AM
முக்கூடல் : மருதம்புத்தூரில் கந்துவட்டி புகாரில் ஒருவர் கைது செய்யப்பட்டார்.மருதம்புத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் மாரியப்பன் (32).
இவரிடம் இதே ஊரை சேர்ந்த மாயாண்டி (20) என்பவர் பத்தாயிரம் ரூபாய் கடன் வாங்கியிருந்தார். அசல்வட்டி எல்லாம் சேர்ந்து 12 ஆயிரம் ரூபாய் திரும்ப கொடுத்துவிட்டார். ஆனால் மாரியப்பன் மாயாண்டியிடம் கூடுதலாக வட்டி தரவேண்டும் என்று மிரட்டியதாக முக்கூடல் போலீசில் மாயாண்டி புகார் செய்தார்.இதுகுறித்து சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் காளிதாஸ் வழக்குபதிவு செய்து மாரியப்பனை கைது செய்தார். சப்-இன்ஸ்பெக்டர் ஜெயஸ்ரீ விசாரணை நடத்தி வருகிறார்.


