/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/தேடி வருகிறது தடுப்பூசி முடங்கிய பணிக்கு புத்துயிர்தேடி வருகிறது தடுப்பூசி முடங்கிய பணிக்கு புத்துயிர்
தேடி வருகிறது தடுப்பூசி முடங்கிய பணிக்கு புத்துயிர்
தேடி வருகிறது தடுப்பூசி முடங்கிய பணிக்கு புத்துயிர்
தேடி வருகிறது தடுப்பூசி முடங்கிய பணிக்கு புத்துயிர்
ADDED : செப் 07, 2011 10:25 PM
திண்டுக்கல் : கிராமங்களில் வீடுகள் தோறும் சென்று தடுப்பூசி போடும் திட்டத்தை மீண்டும் துவக்க, சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.
தமிழகத்தில் 1,342 ஆரம்ப சுகாதார நிலையம்; 18 ஆயிரம் துணை நிலையங்கள் உள்ளன. இவற்றில் 18 ஆயிரத்து 600 நர்ஸ்கள் பணிபுரிகின்றனர். இவர்கள் புதன் கிழமை தோறும் காலை 6 முதல் காலை 10 மணி வரை, கிராமங்களுக்கு சென்று தட்டம்மை, மஞ்சள் காமாலை, போலியோ, வைட்டமின் சொட்டு மருந்து; டெட்டனஸ், காசநோய் தடுப்பூசி போடுவர். போலியோ சொட்டு மருந்து கொடுத்து குழந்தைகள் பலியானதாக எழுந்த சர்ச்சையால், கிராமங்களில் தடுப்பூசி திட்டத்திற்கு, கடந்த அரசு தடை விதித்தது. ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வரவழைத்து தடுப்பூசி போடப்பட்டது. இதனால் தடுப்பூசி திட்டம் முழு அளவில் செயல்படவில்லை. மீண்டும் கிராமங்களுக்கு சென்று தடுப்பூசி, சொட்டு மருந்து வழங்க சுகாதாரத்துறை திட்டமிட்டுள்ளது.


