Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/பெண் குத்திக்கொலையில் துப்பு துலங்க போலீசார் திணறல்

பெண் குத்திக்கொலையில் துப்பு துலங்க போலீசார் திணறல்

பெண் குத்திக்கொலையில் துப்பு துலங்க போலீசார் திணறல்

பெண் குத்திக்கொலையில் துப்பு துலங்க போலீசார் திணறல்

ADDED : ஜூலை 13, 2011 10:01 PM


Google News

திண்டுக்கல் : திண்டுக்கல்லில் பட்டப்பகலில் பெண்ணை கத்தியால் குத்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றவாளிகளை கண்டு பிடிக்க முடியாமல் போலீசார் திணறி வருகின்றனர்.

திண்டுக்கல் இ.பி.காலனியை சேர்ந்த மாரிமுத்து மனைவி கீதா(30). மாரிமுத்து செட்டிநாயக்கன்பட்டி ஊராட்சி உதவியாளராக உள்ளார். இவருக்கு விபத்தில் கால் ஊனமானது. தொடர்ந்து அவர் அலுவலகம் சென்று வருவார். கடந்த ஜூன் 21ம் தேதி காலை 10 மணிக்கு வழக்கம் போல் மாரிமுத்து அலுவலகத்திற்கு சென்று விட்டார். மகன் ஜெயஹரீஸ்(8) பள்ளிக்கு சென்று விட்டான். மனைவி கீதா மட்டும் வீட்டில் தனியாக இருந்துள்ளார்.



மதியம் 12 மணிக்கு வேலைக்கார பெண் வீட்டிற்கு வந்துள்ளார். வீட்டின் கதவு திறக்கப்பட்டு, உள்ளே கீதா வயிறு, முதுகில் கத்தியால் குத்தப்பட்டு ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தார். இவரின் கால்கள் துணியால் கட்டப்பட்டு கிடந்தது. இது குறித்து தாடிக்கொம்பு போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விசாரணையில் தேக்கம்: முதலில் மாரிமுத்து தரப்பினர் 13 பவுன் நகையும், 20 ஆயிரம் பணமும் திருடப்பட்டதாக கூறினர். பின்பு போலீசார் நகையை கைபற்றினர். ஒரு செயின், ஒரு மோதிரம் மட்டும் காணாமல் போய்யுள்ளது. போலீசார் கீதா கொலை செய்யப்பட்டு ரத்த வெள்ளத்தில் கிடந்த போது, நான்கு பேரின் ரத்த கறைப்படிந்த கால்தடங்கள் தெரிந்தன. இந்த கால் தடங்களை ஒப்பிட்டு போலீசார் விசாரித்தனர். இதிலும் சரியாக துப்பு துலங்கவில்லை. நகைக்காக கொலை செய்யப்பட்டரா இல்லை, சொத்து தகராறா என்று தெரியாமல் போலீசார் குழப்பத்தில் உள்ளனர். தனது தங்கையின் கொலை குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் போலீசார் தொடர்ந்து தாமதம் காட்டி வருவதாக கீதாவின் சகோதாரர்கள் கலெக்டர் நாகராஜினிடம் மனு அளித்துள்ளனர்.









      Our Apps Available On




      Dinamalar

      Follow us