ADDED : செப் 30, 2011 01:58 AM
ஈரோடு: ஈரோட்டில் நேற்று மாலை பெய்த திடீர் மழையால் குளிர்ந்தது.
ஈரோட்டில்
தென்மேற்கு பருவமழை அவ்வப்போது மட்டுமே பெய்கிறது. இரு வாரங்களாக வெயில்
வாட்டி வந்தது. மக்கள் புழுக்கத்தில் தவித்தனர். இந்நிலையில், நேற்று மாலை 6
மணியளவில் சிறிய தூறலாக மழை பெய்ய ஆரம்பித்து, சிறிது நேரத்தில் கடும் மழை
பெய்தது. அரை மணி நேரம் பெய்த மழையின் காரணமாக, ஈரோடு குளிர்ந்தது.
மணிக்கூண்டு, சூரம்பட்டி வலசு உள்பட பல தாழ்வான பகுதிகளில் மழை நீர்
பெருக்கெடுத்து ஓடியது.