ஜெயிலில் மொபைல் போன் :எம்.எல்.ஏ காவல் நீட்டிப்பு
ஜெயிலில் மொபைல் போன் :எம்.எல்.ஏ காவல் நீட்டிப்பு
ஜெயிலில் மொபைல் போன் :எம்.எல்.ஏ காவல் நீட்டிப்பு
ADDED : அக் 07, 2011 04:24 AM
திருவனந்தபுரம் : குற்றவழக்கு ஒன்றிற்காக சிறையில்அடைக்கப்பட்டுள்ள கேரள காங்கிரஸ் எம்.எல்.ஏ., பாலகிருஷ்ணபிள்ளையின் தண்டனை காலத்தை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது கேரள அரசு.
கேரளாவின் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர் பால கிருஷ்ண பிள்ளை. இவர் மீது எழுப்பப்பட்ட குற்றவழக்கிற்காக ஒரு ஆண்டு சிறை தண்டனை பெற்று கடந்த பிப்ரவரி மாதம் முதல் சிறையில் இருந்து வருகிறார்.இந்நிலையில் எதிர்கட்சியான கம்யூனிஸ்ட் கட்சி தலைவர் அச்சுதானந்தன் தலைமையிலான கம்யூனிஸ்ட் கட்சியினர் மாநில கவர்னர் எம்.ஓ.எச். பரூக்கை சந்தித்து மனு ஒன்றை அளித்தனர். அதில் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பாலகிருஷ்ண பிள்ளை எம்.எல்.ஏ., சட்ட விரோதமாக மொபைல் போனை பயன்படுத்தி வருகிறார் என குறிப்பிடப்பட்டிருந்தது. இதனையடுத்து கேரள மாநில முதல்வர் உம்மன் சாண்டி பாலகிருஷ்ண பிள்ளையின் சிறை தண்டனை காலத்தை நான்கு நாட்கள் அதிகரித்து நீட்டித்து உத்தரவிட்டுள்ளார். பிள்ளையின் சிறை காலம் வரும் ஜனவரி 2-ம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில் மேலும் நான்கு நாட்கள் கழிந்த பின்னர் ஜனவரி 6-ம் தேதி விடுதலையாவார் என எதிர்பார்க்கப்படுகிறது.


