/உள்ளூர் செய்திகள்/நாகப்பட்டினம்/பாரதிதாசன் மாதிரி கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்கம்பாரதிதாசன் மாதிரி கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
பாரதிதாசன் மாதிரி கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
பாரதிதாசன் மாதிரி கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
பாரதிதாசன் மாதிரி கல்லூரி முதலாண்டு வகுப்பு துவக்கம்
ADDED : ஆக 09, 2011 02:45 AM
வேதாரண்யம்: வேதாரண்யத்தில் பாரதிதாசன் மாதிரி உறுப்பு கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்புகள் நேற்று துவங்கியது.வேதாரண்யத்தில் அரசு சார்பில் கலைக்கல்லூரி அமைக்க தமிழக முதல்வர் ஜெயலலிதா உத்தரவிட்டு, கடந்த மாதம் 18ம் தேதி வீடியோ கான்பிரஸ்சிங் மூலம் துவக்கி வைத்தார்.
வேதாரண்யம் குருகுல வளாகத்தில் புதிய கல்லூரியில் முதலாம் ஆண்டு வகுப்பு துவக்க விழா நேற்று நடந்தது.இதில் பி.ஏ., ஆங்கிலம், பி.பி.ஏ., பி.காம். பி.எஸ்.சி., கணிதம் ஆகிய நான்கு வகுப்புகளில் 50 மாணவ, மாணவிகள் வீதம் நான்கு பிரிவுகளிலும் 200 பேருடன் வகுப்புகள் துவங்கியது. துவக்கவிழாவில் பாரதிதாசன் பல்கலை கழக பதிவாளர் ராமசாமி தலைமை வகித்து மாணவ, மாணவர்களிடையே பேசினார். பல்கலைக் கழக பி.ஆர்.ஓ., ராஜகோபால், ஆட்சி மன்ற குழு உறுப்பினர் ராஜகோபால், கல்லூரி முதல்வர் லெட்சுமணன், அ.தி.மு.க., தொகுதி செயலாளர் சண்முகராசு, ஆற்காட்டுத்துறை கிராம தலைவர் சேதுபதி உட்பட ஏராளமானோர் பங்கேற்றனர்.


