/உள்ளூர் செய்திகள்/தேனி/மக்களை தேடிசென்று ஓய்வின்றி உழைப்பேன் : ராயப்பன்பட்டி ஒன்றியகுழு காங்.,வேட்பாளர் பீட்டர்மக்களை தேடிசென்று ஓய்வின்றி உழைப்பேன் : ராயப்பன்பட்டி ஒன்றியகுழு காங்.,வேட்பாளர் பீட்டர்
மக்களை தேடிசென்று ஓய்வின்றி உழைப்பேன் : ராயப்பன்பட்டி ஒன்றியகுழு காங்.,வேட்பாளர் பீட்டர்
மக்களை தேடிசென்று ஓய்வின்றி உழைப்பேன் : ராயப்பன்பட்டி ஒன்றியகுழு காங்.,வேட்பாளர் பீட்டர்
மக்களை தேடிசென்று ஓய்வின்றி உழைப்பேன் : ராயப்பன்பட்டி ஒன்றியகுழு காங்.,வேட்பாளர் பீட்டர்
ADDED : அக் 13, 2011 09:54 PM
உத்தமபாளையம் : உத்தமபாளைம் ஊராட்சி ஒன்றியம் ராயப்பன்பட்டி கவுன்சிலர் பதவிக்கு காங்கிரஸ் சார்பில் பி.ஏ.,பீட்டர் கை சின்னத்தில் போட்டியிடுகிறார்.
பாரம்பரியம்மிக்க காங்கிரஸ் குடும்பத்தை சேர்ந்தவர். இவரது தந்தை ஆசிரியர் பாக்கியம் கல்வித்துறை சேவையில் ராயப்பன்பட்டி மக்களிடையே நற்பெயர் பெற்றவர். வேட்பாளர் பீட்டர் இப்பகுதியில் பெனடிக்ட் மெட்ரிக்பள்ளி துவங்கி 7 ஆண்டுகளாக கல்விப்பணியில் பலதொண்டுகள் புரிகிறார்.
2001ல் ராயப்பன்பட்டி ஊராட்சி உறுப்பினராக இருந்து பல வளர்ச்சி பணிகளை செய்துள்ளார். தற்போது அன்னை தெரஸா இளைஞர்மன்றம், சேவாதள காங்கிரஸ் தலைவராக உள்ளார். இத்தேர்தலில் கிராம நிர்வாககுழு ஆதரவுடன் போட்டியிடுகிறார். அவர் கூறியதாவது; ராயப்பன்பட்டி பகுதியின் அனைத்து குறைகளையும் தீர்த்து, எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான அனைத்து திட்டங்களையும் செயல்படுத்தி மக்களூக்காக ஓய்வின்றி உழைப்பேன். சொந்த செலவில் மக்கள் குறைதீர்க்க அலுவலகம் அமைத்து குறைகள் நிவர்த்தி செய்யப்படும். லஞ்சம் ஊழல் இல்லாத தூய்மையான நிர்வாகம் ஏற்படுத்துவேன். குடிநீர் தேவையின் இடர்பாடுகளை தீர்த்து தேவையான புதிய திட்டங்கள் மூலம், சுகாதாரமான நிறைவான குடிநீர் அளித்து தன்னிறைவு காணப்படும். ஆரம்ப சுகாதார நிலையம் 24 மணிநேர மருத்துவமனையாக மாற்றப்படும். மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் பஸ்கள் இயக்கப்படும். சிமிண்ட்ரோடுகள் சீரமைக்கப்பட்டு தேவையான இடங்களில் புதிதாக அமைக்கப்படும். மகளிர் குழு மானிய கடன், இலவச பள்ளி கல்வி, கல்விக் கடன் பெற்றுதரப்படும். முக்கிய வீதிகளில் தார்சாலை, மத்திய அரசு உதவியுடன் ஆற்றில் தடுப்பணை, லூர்துநகரில் சி.சி.ரோடு, தார்சாலை,பாலம் கட்டப்படும். 100 நாள் வேலை மக்கள் பயன்பெறும் விதத்தில் மாற்றி அமைக்கப்படும். கல்லறை சாக்கடை தூர்வாரி ஐந்துமடை பாதை பராமரிக்கப்படும். பொம்மையகவுண்டன்பட்டியின் தேவைகள் அனைத்தும் நிறைவு செய்யப்படும். ரேசன் கடை நேரம் அதிகரித்து அனைத்து பொருள்களும் குறைவின்றி வழங்கப்படும், என்றார். தொடர்புக்கு; 94433-88607


