/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த மாதாமெட்ரிக்பள்ளி மாணவர்கள்.வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த மாதாமெட்ரிக்பள்ளி மாணவர்கள்.
வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த மாதாமெட்ரிக்பள்ளி மாணவர்கள்.
வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த மாதாமெட்ரிக்பள்ளி மாணவர்கள்.
வட்டார அளவில் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்த மாதாமெட்ரிக்பள்ளி மாணவர்கள்.
ADDED : செப் 07, 2011 03:01 AM
திருவேங்கடம்:கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீமாதாமெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவ, மாணவிகள் வட்டார அளவிலான பல்வேறு போட்டிகளில் முதல் மற்றும் இரண்டாம் இடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.மாணவிகள் ;சங்கரன்கோவில் வட்டார அளவிலான விளையாட்டு போட்டிகள் கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீமாதாமெட்ரிக் பள்ளி விளையாட்டு மைதானத்தில் நடந்தது. இதில் வட்டார அளவில் இப்பள்ளி மாணவ, மாணவியர்கள் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். வட்டார அளவிலான போட்டியில் சண்முகப்பிரியா ஈட்டி எறிதலில் முதலிடமும், ஜோதிலெட்சுமி இரண்டாம் இடமும் பெற்றுள்ளனர். சீனியர் பிரிவு வாலிபால் போட்டியில் சண்முகப்பிரியா ஜோதிலெட்சுமி, இ.ஜோதிலெட்சுமி, ராசாத்தி, சுசிலா, அனுபிரியா, ஜெனிபர் ஆகியோர் முதலிடம் பெற்றனர்.ஜூனியர் பிரிவு வாலிபால் போட்டியில் ஆசிகா, சங்கரேஸ்வரி, செல்வராணி, காளீஸ்வரி, நித்யா, களஞ்சியம், பெர்ட்டினா, ரஞ்சனி ஆகிய மாணவிகள் வட்டார அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளனர்.
மாணவர்கள் :சீனியர் பிரிவு 400 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் குருசாமி என்ற மாணவர் இரண்டாம் இடம் பெற்றுள்ளார். சீனியர் பிரிவு வாலிபால் போட்டியில் குருசாமி, கார்த்திகேயன், பால்ராஜ், கணேஷ்குமார், சஞ்சய், பாண்டியராஜ் ஆகியோர் வட்டார அளவில் இரண்டாவது இடம் பெற்றுள்ளனர். சீனியர் எறிபந்து போட்டியில் அசோக்கமார், ஜெயசூரியா, சதீஷ்குமார், கணேஷ்ராஜ், தினேஷ், நவின், சுந்தர், அய்யனார், முத்துகணேஷ் ஆகியோர்களும், சூனியர் பிரிவில் ரோபின்ராஜ், வசந்த், கார்த்திக், ராஜேஷ், ராஜ், ஜெகதீஸ்குமார், வெங்கடேஷ், ஸ்ரீராம், நிர்மல்குமார், மனோஜ், மீனாட்சிசுந்தரம் ஆகியோர்களும் இரண்டாவது இடம் பிடித்து சாதனை படைத்துள்ளனர்.
சாதனை படைத்துள்ள மாணவ, மாணவியர்களை கரிவலம்வந்தநல்லூர் ஸ்ரீமாதா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி நிர்வாகியும், முதல்வருமான கலையரசி, ஆசிரிய, ஆசிரியைகள், பொதுமக்கள் பெற்றோர்கள் வெகுவாக பாராட்டினர்.


