ADDED : ஜூலை 28, 2011 09:30 PM
பொள்ளாச்சி : பொள்ளாச்சி பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களாக
என்.ஆர்.எச்.எம்., சார்பில் பச்சிளம் மற்றும் சிறுவர்களின் நோய்களுக்கான
ஒருங்கிணைந்த பாதுகாப்பு குறித்த பயிற்சி மற்றும் செயல்முறை விளக்கம்
அளிக்கப்பட்டு வருகிறது.ஆனைமலை பகுதியில் பெரியபோது, சேத்துமடை,
காளியாபுரம், ஆனைமலை ஆரம்ப சுகாதார நிலையங்களை சேர்ந்த செவிலியர்கள்,
அங்கன்வாடி பணியாளர்களுக்கு அளிக்கப்பட்டு வருகிறது.
பொள்ளாச்சி அரசு
மருத்துவமனை குழந்தைகள் நல டாக்டர் ராஜா பயிற்சியளித்தார். கோலார்பட்டி
சுகாதார நிலைய டாக்டர் மணிவண்ணன், மல்லீஸ்வரி, உமாராணி, தமிழ்ஜோதி உட்பட
பலர் பங்கேற்றனர்.


