Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திருச்சி/மணப்பாறை மெட்ரிக்., பள்ளி ஆசிரியை விருதுக்கு தேர்வு

மணப்பாறை மெட்ரிக்., பள்ளி ஆசிரியை விருதுக்கு தேர்வு

மணப்பாறை மெட்ரிக்., பள்ளி ஆசிரியை விருதுக்கு தேர்வு

மணப்பாறை மெட்ரிக்., பள்ளி ஆசிரியை விருதுக்கு தேர்வு

ADDED : செப் 05, 2011 12:11 AM


Google News
மணப்பாறை: தமிழ்நாடு மற்றும் பாண்டிச்சேரி மெட்ரிக்குலேசன் பள்ளி சங்கம் மற்றும் வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகமும் இணைந்து மணப்பாறை மாண்ட்போர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ரீஹானாவை சிறந்த ஆசிரியருக்கான விருதுக்கு தேர்வு செய்துள்ளது.தமிழகம் மற்றும் பாண்டிச்சேரி மெட்ரிகுலேசன் பள்ளிகள் சங்கம் மற்றும் வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகமும் இணைந்து சிறந்த மெட்ரிகுலேசன் ஆசிரியருக்கான விருது வழங்கும் விழா நடத்துகிறது. வேலூர் வி.ஐ.டி., பல்கலைக்கழகத்தில் இன்று (5ம்தேதி) காலை விழா நடக்கிறது.விழாவில், மணப்பாறை மாண்ட்போர்ட் மெட்ரிக்., மேல்நிலைப்பள்ளி முதுகலை ஆசிரியர் ரீஹானாவுக்கு மனோன்மணியம் சுந்தரரனார் பல்கலைக்கழக துணை வேந்தரும், சுகாதாரத்துறை அமைச்சர் டாக்டர் விஜய்யும் சிறந்த ஆசிரியர் விருதை வழங்குகின்றனர்.

சிறந்த ஆசிரியர் விருது பெறும் ரீஹானாவை பள்ளியின் முதல்வர் செல்வின் ஆண்டனி, ஜீ மாஸ்டர், ஆசிரியர்கள், விக்டர் பிரிட்டோ, ஜோஸ்மின், ஜான், சவரிராஜ், சாந்தா ஆகியோர் வாழ்த்தி வழியனுப்பினர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us