Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தேனி/துண்டு பிரசுரம் வெளியீடு

துண்டு பிரசுரம் வெளியீடு

துண்டு பிரசுரம் வெளியீடு

துண்டு பிரசுரம் வெளியீடு

ADDED : ஆக 22, 2011 12:13 AM


Google News
தேவதானப்பட்டி : தேசிய ஊரக வேலை உறுதி திட்டம் குறித்த துண்டு பிரசுரம் வெளியிடப்பட்டுள்ளது.

ஒரு குடும்பத்திற்கு, ஆண்டுக்கு 100 நாள் வேலை வழங்கப்படும். ஆண், பெண் இருபாலருக்கும் சமமாக சம்பளம் உண்டு. தனித்தனி குழுவாக பிரிக்கப்பட்டு வேலை செய்யும் இடம் அளந்து கொடுக்கப்படும். வேலைக்கு வரும் போது மண்வெட்டி, கடப்பாறை, இரும்பு தட்டு, பிக்காஸ் கட்டாயம் கொண்டு வரவேண்டும். 20 நபர்கள் கொண்ட குழுவிற்கு நாள் ஒன்றுக்கு 22 மீட்டர் நீளம், 10 மீட்டர் அகலம், 0.15 மீட்டர் ஆழம் வேலை செய்தால் 33. க.மீ., அளவீடு வருகிறது. இதன் அடிப்படையில் 119 ரூபாய் கூலி வழங்கப்படும். காலை 8 முதல் மாலை 5 மணிவரை வேலை செய்ய வேண்டும். இத்திட்டத்தில் செய்யப்படும் பணிகள் சமுதாயத்திற்கு பயன்தரக் கூடியதாகவும், சொத்துக்கள் நிலைதிருக்கக்கூடியதாகவும் இருக்க வேண்டும், என கூறப்பட்டுள்ளது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us