/உள்ளூர் செய்திகள்/திருநெல்வேலி/இலஞ்சியில் 30ம் தேதி த.மு.எ.க.ச.மாநாடுஇலஞ்சியில் 30ம் தேதி த.மு.எ.க.ச.மாநாடு
இலஞ்சியில் 30ம் தேதி த.மு.எ.க.ச.மாநாடு
இலஞ்சியில் 30ம் தேதி த.மு.எ.க.ச.மாநாடு
இலஞ்சியில் 30ம் தேதி த.மு.எ.க.ச.மாநாடு
தென்காசி : இலஞ்சியில் வரும் 30ம் தேதி தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க மாவட்ட மாநாடு நடக்கிறது.தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்க நெல்லை மாவட்ட 11வது மாநாடு இலஞ்சி மணக்காவு ஐயனார் திருமண மண்டபத்தில் வரும் 30ம் தேதி துவங்கி இரண்டு நாட்கள் நடக்கிறது.
புகைப்பட கண்காட்சிக்கு மதியழகன் தலைமை வகிக்க ராமலிங்கம் திறந்து வைக்கிறார். உதவி குறும்படத்தை மாரியப்பன் வெளியிட சிவக்குமார் பெற்றுக் கொள்கிறார். கார்ட்டூன் கண்காட்சிக்கு மனோகரன் தலைமை வகிக்க செந்தில்வேல் திறந்து வைக்கிறார்.கிருஷ்ணசாமி, திருவுடையான், சுலைமான் தமிழிசை நடக்கிறது. கோமதி, சரவணா, செல்வி, சுதா, அருண்பாரதி கவிதை வாசிக்கின்றனர். கீர்த்திகா, கவுசல்யா நடனம் இடம் பெறுகிறது. பேராசிரியை சங்கரி தலைமையில் கருத்தரங்கம் நடக்கிறது. ஆதவன் தீட்சண்யா, கிருஷி கருத்துரை வழங்குகின்றனர். இரவு மீசைகள்-செல்போன் வீதி நாடகங்கள் நடக்கிறது. குறும்படம் திரையிடப்படுகிறது.இரண்டாம் நாள் 31ம் தேதி காலையில் பிரதிநிதிகள் மாநாடு நடக்கிறது. நாறும்பூமிநாதன் தலைமை வகிக்கிறார். வடிவேல் வரவேற்கிறார். உதயசங்கர் துவக்க உரையாற்றுகிறார். பாஸ்கரன், ராஜகோபால் அறிக்கை வாசிக்கின்றனர். புதிய மாவட்ட குழு தேர்வு செய்யப்படுகிறது. பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. லட்சுமிகாந்தன் நிறைவுரையாற்றுகிறார். கிருஷ்ணன் நன்றி கூறுகிறார்.