/உள்ளூர் செய்திகள்/கன்னியாகுமரி/கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குழித்துறையில் டெம்போவுடன் பறிமுதல்கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குழித்துறையில் டெம்போவுடன் பறிமுதல்
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குழித்துறையில் டெம்போவுடன் பறிமுதல்
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குழித்துறையில் டெம்போவுடன் பறிமுதல்
கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்தல் குழித்துறையில் டெம்போவுடன் பறிமுதல்
ADDED : ஜூலை 24, 2011 12:59 AM
மார்த்தாண்டம் : குழித்துறையில் கேரளாவுக்கு கடந்த முயன்ற ஒன்றரை டன் ரேஷன் அரிசி டெம்போவுடன் சிக்கியது.தமிழகத்தில் ரேஷன் கடைகளில் தற்போது இலவசமாக ரேஷன் அரிசி வழங்கப்பட்டு வருகிறது.
இதனை தொடர்ந்து கேரளாவுக்கு ரேஷன் அரிசி கடத்துவது அதிகரித்துள்ளது. கன்னியாகுமரி மாவட்டத்தில் தேசிய நெடுஞ்சாலையில் வாகன சோதனை அதிகரித்துள்ளதால், கடற்கரை சாலை வழியாக கடத்தல் நடக்கிறது.கடந்த மாதம் தொடர் சோதனையில் கேரளாவுக்கு கடந்த முயன்ற மண்ணெண்ணெய் வாகனத்துடன் சிக்கியது.
இந்நிலையில் குழித்துறை வழியாக டெம்போவில் ரேஷன் அரிசி கடத்தப்படுவதாக விளவங்கோடு வட்ட வழங்கல் அதிகாரி வசந்தராஜனுக்கு தகவல் கிடைத்தது.இதனை தொடர்ந்து விளவங்கோடு ஆர்.ஐ., ஜோதீஷ்குமார், மைக்கேல் சுந்தர்ராஜ் ஆகியோர் குழித்துறை கிராம அலுவலகம் அருகே வாகன சோதனை செய்தனர். அப்போது விரைவாக வந்த டெம்போவை நிறுத்தி சோதனை செய்த போது, டிரைவர் வாகனத்தை நிறுத்தி விட்டு தப்பி ஓடினார்.டெம்போவில் சோதனை செய்த போது ஒன்றரை டன் ரேஷன் அரிசி இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. அரிசியும், டெம்போவும் பறிமுதல் செய்யப்பட்டது.


