/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/கல்லூரி மாணவன், ஏட்டு கின்னஸ் சாதனை முயற்சிகல்லூரி மாணவன், ஏட்டு கின்னஸ் சாதனை முயற்சி
கல்லூரி மாணவன், ஏட்டு கின்னஸ் சாதனை முயற்சி
கல்லூரி மாணவன், ஏட்டு கின்னஸ் சாதனை முயற்சி
கல்லூரி மாணவன், ஏட்டு கின்னஸ் சாதனை முயற்சி
ADDED : ஆக 09, 2011 01:19 AM
திண்டுக்கல் : திண்டுக்கல் ஆர்.வி.எஸ்., பொறியியல் கல்லூரி மாணவன், போலீஸ் ஏட்டு இருவரும் கின்னஸ் சாதனை முயற்சியில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்லை சேர்ந்த மாணவர் ஆர்.விக்னேஷ் (20), வயிற்றை 25 செகன்ட்டில், 68 முறை சுழற்றி சாதனை முயற்சியில் ஈடுபட்டார். மாணவர் கூறியது: யோகசனத்தின் ஒரு பகுதி தான் இது. இதற்கு பயிற்சியாளர் வைத்து கொள்ளவில்லை. நானே பயிற்சி எடுத்தேன். கடந்த மாதம், 30 வினாடியில் 57 முறை வயிற்றை சுழற்றினேன். இதை 'யூனிவர்சல்' அமைப்பு அங்கீகரித்துள்ளது. இச்சாதனையை நானே முறியடிக்க வேண்டும் என்பதற்காக, இம் முயற்சியில் இறங்கினேன். இதற்காக, நேற்று முன்தினம் இரவு முதல் சாப்பிடவில்லை, என்றார்.
திண்டுக்கல் ஆயுதப்பிரிவு ஏட்டு மாரியப்பன், 40 கிலோ எடையை, 41 மீட்டர் தூரம் வரை, பல்லால் தூக்கி நடந்தார்.
அவர் கூறியது: ஏற்கனவே, 35 கிலோ மூடையை 60 வினாடி; 60 கிலோவை 15 வினாடி; 40 கிலோவை 60 வினாடி; 65 கிலோவை 20 வினாடி; 67 கிலோவை 26 வினாடி; மண்டியிட்டு 50 கிலோவை 35 வினாடி; 68.5 கிலோவை 40 வினாடிகளும் தூக்கினேன். கடந்த ஆண்டு 40 கிலோ எடையை 30 மீட்டர் தூரம் தூக்கினேன். முந்தைய முயற்சிகளை 'யூனிவர்சல்' அங்கீகரித்துள்ளது, என்றார். சந்திரசேகரன் எஸ்.பி., உள்ளிட்டோர் பங்கேற்றனர்.


