Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/விழுப்புரம்/வீட்டுவசதி வாரிய வணிக மனைகள் பொதுஏலம்

வீட்டுவசதி வாரிய வணிக மனைகள் பொதுஏலம்

வீட்டுவசதி வாரிய வணிக மனைகள் பொதுஏலம்

வீட்டுவசதி வாரிய வணிக மனைகள் பொதுஏலம்

ADDED : செப் 16, 2011 12:46 AM


Google News
விழுப்புரம்:வீட்டு வசதி வாரியத்தின் சார்பில் வணிக மனைகள் நேற்று விழுப்புரத்தில் பொது ஏலம் விடப்பட்டன.தமிழ்நாடு வீட்டு வசதி வாரியத்தின் விழுப்புரம் வீட்டு வசதிப் பிரிவு அலுவலகம் மூலம் நிலவள வங்கி திட்டத்தின் படி வணிகமனைகள் ஏலம் விடப்படுகிறது. கடலூர் மாவட்டத்தில் உள்ள விருத்தாசலம், பண்ருட்டி மற்றும் ஆனைக்குப்பம் பகுதிகளில் வீட்டுவசதி பிரிவில் உள்ள வணிக மனைகள் நேற்று ஏலத்தில் விடப்பட்டன.

இதில் மூன்று கடை மனைகள் ஏலம் முடிவு செய்து தலைமை அலுவலக அனுமதிக்கு அனுப்பி வைத்தனர். விழுப்புரம் மகாராஜபுரத்தில் உள்ள வீட்டுவசதி வாரிய நிர்வாக அலுவலகத்தில் நடந்த ஏல நிகழ்ச்சியில் தஞ்சாவூர் வீட்டுவசதிப் பிரிவு உதவி செயற்பொறியாளர் சிகாமணி மேற்பார்வையாளராக கலந்து கொண்டார். விழுப் புரம் வீட்டு வசதிப் பிரிவு செயற்பொறியாளர் மற்றும் நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் தலைமை தாங்கி ஏலத்தை நடத்தினார். அலுவலக கண்காணிப்பாளர் ரங்கராஜ், உதவியா ளர் கணேசன் உடனிருந்தனர். ஏல நடவடிக்கைகள் முழுவதும் வீடியோவில் பதிவு செய்யப்பட்டன.விழுப்புரம் மாவட்டத்திற்கு உட்பட்ட வணிக மனைகள் மற்றும் பொதுஉபயோக மனைகளுக்கான ஏலம் இன்று காலை நடக்கிறது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us