"மூடிஸ்' நிறுவனத்தால் கிரீசுக்கு மேலும் சிக்கல்
"மூடிஸ்' நிறுவனத்தால் கிரீசுக்கு மேலும் சிக்கல்
"மூடிஸ்' நிறுவனத்தால் கிரீசுக்கு மேலும் சிக்கல்
ஏதென்ஸ் : கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ்', கிரீசின் கடன் மதிப்பீட்டுக் குறியீட்டை, மேலும் இரு புள்ளிகள் குறைத்துள்ளது.
ஆனால், பிரபல கடன் மதிப்பீட்டு நிறுவனமான 'மூடிஸ்', கிரீஸ் நாட்டுக் கடன் பத்திரங்கள் மீதான குறியீட்டை, நேற்று மேலும் இரு புள்ளிகள் குறைத்துள்ளது. இதுவரை அந்நாட்டுக் கடன் பத்திரங்களுக்கு அளிக்கப்பட்டிருந்த 'சி.ஏ.ஏ., 1' என்ற தரம், தற்போது 'சி.ஏ.,' ஆகக் குறைக்கப்பட்டுள்ளதாக, 'மூடிஸ்' நிறுவனம் தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,'கிரீஸ் நாட்டுக்கு தற்போது ஐரோப்பிய யூனியன் அறிவித்துள்ள நிதியுதவி, அந்நாடு தன் கடன் நம்பகத் தன்மையை இழந்து விட்டதையே காட்டுகிறது. அதனால், அதன் கடன் மதிப்பீட்டுக் குறியீடு மேலும் குறைக்கப்பட்டுள்ளது. கிரீஸ், தன் நிதி மற்றும் பொருளாதாரச் சீர்திருத்தங்களை நிறைவேற்ற இயலாத அளவிற்கு சிக்கல்களை எதிர்கொள்ள வேண்டி வரும்.
கிரீசுக்கு அளிக்கப்பட்ட இத்திட்டம், கடனில் மூழ்கி வரும் பிற ஐரோப்பிய நாடுகளையும் நெருக்கடி நிலைக்குத் தள்ளிவிடும். அந்நாடுகள் தங்கள் கடனை ஒழுங்காகத் திருப்பிச் செலுத்த இயலாத நிலை ஏற்படும். இவ்வாறு, 'மூடிஸ்' தன் அறிக்கையில் தெரிவித்துள்ளது.