ஆன்மிகத்திற்கு முரண்பாடான விஷயங்கள் சமச்சீர் கல்வி புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்
ஆன்மிகத்திற்கு முரண்பாடான விஷயங்கள் சமச்சீர் கல்வி புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்
ஆன்மிகத்திற்கு முரண்பாடான விஷயங்கள் சமச்சீர் கல்வி புத்தகத்திலிருந்து நீக்க வேண்டும்

ராமேஸ்வரம் : ''மாணவர்களுக்கு வழங்கப்படும் சமச்சீர் கல்வி பாடப்புத்தகங்களில் உள்ள ஆன்மிகத்திற்கு முரண்பாடான விஷயங்களை தவிர்த்து, அடுத்தாண்டு புத்தகங்களை வெளியிட வேண்டும்,'' என விஸ்வ இந்து பரிஷத் அகில உலக செயல் தலைவர் வேதாந்தம் கூறினார்.
ஆன்மிகப்பற்றுள்ளவர்களை அறங்காவலர்களாக நியமிக்க வேண்டும். கோயில்களை தனித்து இயங்கும் வாரியத்திடம் ஒப்படைக்க வேண்டும். தங்கச்சிமடம், வேதாளை, பாம்பன் போன்ற பல இடங்களில் ராமநாதசுவாமி கோயில் சொத்துக்கள் பிற சமயத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. இவற்றை மீட்க வேண்டும். இல்லை என்றால், கோர்ட் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தனுஷ்கோடி பகுதியில் மாற்று மதத்தினரின் கட்டுமானங்கள், ஆக்கிரமிப்புகளுக்கு அனுமதிக்கக் கூடாது. இலங்கையில் தமிழர்களுக்கு எதிராக ராணுவ உதவி செய்தது, பிரபாகரன் இருக்கும் இடம் குறித்து தகவல் கொடுத்தது காங்கிரசும், தி.மு.க.,வும்தான். இலங்கை தமிழர்கள் தன்மான உரிமையுடன், சிங்கள மக்களுக்கு சமமாக வாழ, தேவையான நடவடிக்கையில் மத்திய அரசு கவனம் செலுத்த வேண்டும். முன்னாள் ஜனாதிபதி அப்துல்கலாம் கூறியதுபோல், ராமாயண காலத்தில் நமது வியாபாரம், உறவு குறித்து ஆய்வு செய்து எதிர்கால சந்ததியினருக்கு எடுத்துக்கூறவேண்டும், என்றார். பா.ஜ.,தேசியக்குழு உறுப்பினர் முரளீதரன், ராமர் பாலம் பாதுகாப்பு கமிட்டி நிர்வாகி தில்லைபாக்கியம் உடன் இருந்தனர்.


