ADDED : ஜூலை 28, 2011 12:47 AM
வால்பாறை : வால்பாறை அரசு மருத்துவமனையில் இலவச சட்ட உதவி முகாம் நடந்தது.நோயாளிகளின் நலனுக்காக வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் இலவச சட்ட விழிப்புணர்வு முகாம் அரசு மருத்துவமனையில் நடந்தது.
தலைமை மருத்துவர் பிரபு வரவேற்றார். முகாமை துவக்கி வைத்து வால்பாறை கோர்ட் மாஜிஸ்திரேட் வேலுச்சாமி பேசும்போது, ஏழை, எளிய மக்கள் பயன்பெறும் வகையில் மருத்துவமனைகளுக்கு வரும் நோயாளிகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை அளிக்க வேண்டும் என்றார்.முகாமில் தாசில்தார் சின்னப்பையன், வக்கீல்பால்பாண்டி, முத்துசாமி உட்பட பலர் கலந்து கொண்டனர். வட்ட சட்டப்பணிகள் குழு முதுநிலை நிர்வாக உதவியாளர் வெள்ளைசாமி நன்றி கூறினார்.


