கர்நாடக அமைச்சருக்கு செருப்படி: வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்
கர்நாடக அமைச்சருக்கு செருப்படி: வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்
கர்நாடக அமைச்சருக்கு செருப்படி: வேலை கொடுக்காததால் வாலிபர் ஆத்திரம்
ADDED : அக் 01, 2011 09:54 PM
பெங்களூரு: கர்நாடக வீட்டு வசதித் துறை அமைச்சர் சோமண்ணாவை, வாலிபர் ஒருவர் தாக்கிய சம்பவம், விதான் சவுதாவில்று நடந்தது.கர்நாடக மாநில வீட்டு வசதி வாரிய திட்டங்கள் தொடர்பாக, அமைச்சர் சோமண்ணா, பெங்களூரு விதான் சவுதா மூன்றாவது மாடியிலுள்ள மாநாட்டு அறையில், அதிகாரிகளுடன் கூட்டம் நடத்தி விட்டு, வெளியே வந்தார்.
அப்போது, கர்நாடகாவின் வட பகுதியைச் சேர்ந்த பிரசாத் என்பவர், திடீரென சோமண்ணாவை செருப்பால் அடித்தார்.இதனால், திணறிப் போன சோமண்ணா, ' நான் உனக்கு என்னப்பா அநீதி இழைத்தேன்?' என்று, அவரிடம் கேட்டுள்ளார். அதற்கு அந்த வாலிபர், 'நான் பா.ஜ.,வினால் பாதிக்கப்பட்டவன். வேலை கொடுங்கள் என்று பல முறை கேட்டும், எனக்கு கொடுக்கவில்லை' என்று கோபத்துடன் கூறினார்.இதற்கிடையில், சோமண்ணாவை சுற்றியிருந்த ஊழியர்கள், அவரது ஆதரவாளர்கள் பிரசாத்தை தடுத்து நிறுத்தினர். பின், அவரை, விதான் சவுதா பாதுகாப்பு பொறுப்பு அதிகாரி லட்சுமண் சிங் அலுவலகத்துக்கு அழைத்துச் சென்று ஒப்படைத்தனர்.லட்சுமண் சிங், பிரசாத்திடம் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக, விசாரணை நடத்தினார். பின், கூடுதல் விசாரணைக்காக எம்.எஸ்., கட்டடத்தில் உள்ள போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர்.திடீரென ஏற்பட்ட இக்குழப்பத்தால், அமைச்சர் சோமண்ணா, விதான் சவுதாவிலிருந்து தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். சோமண்ணா தாக்கப்பட்ட தகவலறிந்தவுடன், விதான் சவுதா ஊழியர்கள், அலுவலகத்திலிருந்து வெளியே வந்து தகவல் கேட்க ஆர்வமாக இருந்தனர்.


