/உள்ளூர் செய்திகள்/கடலூர்/வடக்குத்து ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்வடக்குத்து ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்
வடக்குத்து ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்
வடக்குத்து ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்
வடக்குத்து ஊராட்சியில் பொது மருத்துவ முகாம்
ADDED : ஜூலை 13, 2011 11:49 PM
நெய்வேலி: வடக்குத்து ஊராட்சியில் இலவச பொதுநல மருத்துவ முகாம் நடந்தது.வடக்குத்து ஊராட்சி, புதுச்சேரி மகாத்மா காந்தி மருத்துவக்கல்லூரி, நெய்வேலி புதுநகர் அரிமா சங்கம் மற்றும் விவேகானந்தா மக்கள் நல தொண்டு நிறுவனம் இணைந்து இலவச பொதுநல மருத்துவ முகாம் நடந்தது.
மருத்துவ முகாம் துவக்க விழாவிற்கு ஊராட்சி உறுப்பினர் சக்திவேல், அரிமா நிர்வாகிகள் சூசை, குணசேகர், சூரியநாராயணன், மதியழகன் முன்னிலை வகித்தனர். தொண்டு நிறுவன செயலாளர் சரேஷ்பாபு வரவேற்றார். வடக்குத்து ஊராட்சி தலைவர் முகாமை துவக்கி வைத்தார்.முகாமில் கண், காது, மூக்கு, தொண்டை, சிறுநீரகம், எலும்பு முறிவு, குழந்தை நலம், மகப்பேறு, சர்க்கரை நோய், ரத்த அழுத்தம் உள்ளிட்ட நோய்கள் குறித்த மருத்துவ பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் வழங்கப்பட்டது.


