ADDED : ஜூலை 19, 2011 08:00 PM
பாட்னா:பீகார் முதல்வர் நிதிஷ் குமார் நிருபர்களிடம் கூறியதாவது:ஊழலை ஒழிப்பதற்காக துவக்கப்பட்ட லோக் ஆயுக்தா அமைப்பை பலப்படுத்துவது அவசியம்.
அந்த அமைப்பை பரந்த அளவில் மேலும் பல முன்னேற்றங்களுடன் செயல்படும் முறையில் உருவாக்க, காந்தியவாதி அன்னா ஹசாரேவின் உதவியை நாடுவோம்.இதற்காக இம்மாத இறுதி அல்லது அடுத்த மாதத்தில், அன்னா ஹசாரேவுடன் பேசுவோம். சமீபத்தில் நான் டில்லி சென்றிருந்த போது, ஹசாரேவுடன் இதற்கான துவக்கநிலை ஆலோசனைகளை மேற்கொண்டேன், என்றார்.


