/உள்ளூர் செய்திகள்/சேலம்/அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றுவேன்காங்., மேயர் வேட்பாளர் திட்டவட்டம்அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றுவேன்காங்., மேயர் வேட்பாளர் திட்டவட்டம்
அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றுவேன்காங்., மேயர் வேட்பாளர் திட்டவட்டம்
அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றுவேன்காங்., மேயர் வேட்பாளர் திட்டவட்டம்
அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றுவேன்காங்., மேயர் வேட்பாளர் திட்டவட்டம்
ADDED : அக் 12, 2011 02:22 AM
சேலம்: ''சேலம் மாநகரின் அடிப்படை தேவைகளை ஓராண்டில் நிறைவேற்றி
காட்டுகிறேன்,'' என, சேலம் மாநகராட்சி காங்., மேயர் வேட்பாளர் விஜயவர்மன்
கூறினார்.
அவர் கூறியதாவது:காமராஜர் ஆட்சிக்கு பின் தி.மு.க., அ.தி.மு.க., கட்சிகள்
தமிழகத்தை 44 ஆண்டுகளாக ஆட்சி செய்தன. இருந்தும் என்ன பயன்; அடிப்படை
வசதிகள் இதுவரை நிறைவேற்றப்படாமல் உள்ளது. இளைஞர்களுக்கு வாய்ப்பு
கொடுத்தால், அப்துல்கலாம் கண்ட கனவு நிறைவேறும். இந்த முறையாவது சேலம்
மாநகராட்சி மேயராக ஒரு இளைஞரை தேர்வு செய்ய மக்கள் முன்வர வேண்டும்.
எந்தவித கோஷ்டி பூசலும் இல்லாமல், சேலம் நகரில் நான் போட்டியிடுகிறேன்.
காங்., நிர்வாகிகள், தொண்டர்கள் என, அனைவரும் மனமுவந்து எனக்கு ஆதரவு
தருகின்றனர்.அ.தி.மு.க., ஆட்சி பொறுப்பேற்று நான்கு மாதமாகியும் மக்களுக்கு
பயன்படும் வகையில் திட்டங்கள் அறிவிக்கவில்லை. இலவசம் மட்டுமே
அறிவிக்கப்படுகிறது.சேலம் சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை, இதுவரை
செயல்படாமல் கிடப்பில் உள்ளது. தனி கூட்டு குடிநீர் திட்டத்தை விரைந்து
முடித்து, சேலம் நகரில் அனைத்து பகுதிக்கும் பாதுகாப்பான குடிநீர்
வழங்கப்படும். பாதாள சாக்கடை திட்டம் விரைவுபடுத்தப்படும். நான் மேயராக
தேர்வு செய்யப்பட்டால், அடுத்த ஐந்தாண்டுக்கு கூடுதல் வரி விதிக்கமாட்டேன்.
தன்னிறைவு பெற்ற மாநகராட்சியாக மாற்றப்படும். திருமணி முத்தாறு மேற்பகுதி
சிமென்ட் பலகைகளால் மூடப்பட்டு, கார் பார்க்கிங் வசதி மற்றும் சாலையோர சிறு
வணிகர்களுக்காக வளாகம் கட்டித்தரப்படும். இதன் மூலம் மாநகராட்சி வருவாய்
அதிகரிக்கும். சேலம் நகரை சுற்றியுள்ள பல இடங்கள் சுற்றுலா
தலமாக்கப்படும்.பிறப்பு மற்றும் இறப்பு சான்றிதழ்கள் ஆன்லைன் மூலம்
பெறுவதற்கு வழிவகை செய்யப்படும். இவ்வாறு அவர் கூறினார்.தமிழ்நாடு வன்னியர்
மேம்பாட்டு சங்கத்தின் அவசர ஆலோசனை கூட்டம் மற்றும் மகாசபை கூட்டம்
நடந்தது.
இதுகுறித்து மாநில தலைவர் விஜயகுமார் கூறியதாவது:கூட்டத்தில், சேலத்தின்
தேவையை நன்கு உணர்ந்து, அதற்கான எதிர்கால வளர்ச்சிக்கு எந்தெந்த திட்டங்கள்
தேவை என தெளிவாக குறிப்பிட்டு, தேர்தல் அறிக்கை வெளியிட்டு வரும்
காங்கிரஸ் வேட்பாளர் விஜயவர்மனை ஆதரிப்பது என முடிவு செய்யப்பட்டது. வன்னிய
மேம்பாட்டு சங்கத்தின் உறுப்பினர்கள் 60 வார்டுகளிலும் சுற்றுப்பயணம்
செய்து, இவருக்கு ஆதரவாக ஓட்டு சேகரிப்பார்கள்.இவ்வாறு அவர் கூறினார்.


