/உள்ளூர் செய்திகள்/சிவகங்கை/மக்களுக்கு மருத்துவ முகாம் 20வது வார்டு வேட்பாளர் முத்துமாரிமக்களுக்கு மருத்துவ முகாம் 20வது வார்டு வேட்பாளர் முத்துமாரி
மக்களுக்கு மருத்துவ முகாம் 20வது வார்டு வேட்பாளர் முத்துமாரி
மக்களுக்கு மருத்துவ முகாம் 20வது வார்டு வேட்பாளர் முத்துமாரி
மக்களுக்கு மருத்துவ முகாம் 20வது வார்டு வேட்பாளர் முத்துமாரி
ADDED : செப் 30, 2011 01:16 AM
சிவகங்கை : சிவகங்கை 20 வார்டுக்கு காங்., சார்பில் போட்டியிடும் முத்துமாரி வேட்புமனு தாக்கல் செய்தார்.
அவர் கூறுகையில், ''வார்டு பொதுமக்களுக்கு ஆண்டு தோறும் இலவச மருத்துவ முகாம் நடத்தப்படும். வார்டு பகுதியில் பொதுமக்கள் பாதுகாப்பான நடைபயிற்சி பூங்கா அமைக்கப்படும். காளவாசல் பகுதியில் சமுதாய கூடம் அமைக்கப்படும். அலங்கார அன்னை ஆலயத்தின் முன் ஹைமாஸ் விளக்கு அமைக்கப்படும். குடிநீர் வழங்கும் நேரத்தை முன்கூட்டியே தெரிவிக்கும் வகையில் தகவல் மையம் அமைக்கப்படும்.பொது மக்களின் குறைகளை தெரிவிக்க வார்டில் நிரந்தர அலுவலகம்,தெருக்களில் குப்பைகளை போடாமல் இருக்க வார்டு முழுவதும் முக்கிய இடங்களில் குப்பை தொட்டி வைக்கப்படும், '' என்றார்.