ADDED : செப் 04, 2011 09:54 PM
மூணாறு:மூணாறு அருகே
லாக்காடு எஸ்டேட் மானிலை டிவிஷனைச் சேர்ந்தவர் ஷீலா.இவர் தேவிகுளத்தில்
தனியார் அலுவலகத்தில் வேலை செய்து வருகிறார்.நேற்று மதியம் வேலை முடிந்து
வீட்டிற்கு நடந்து சென்று கொண்டிருந்தார்.
மானிலை மூன்று முக்கு
பகுதியில் காட்டிற்குள் மறைந்திருந்த திருடன், ஷீலாவை ப தாக்கி விட்டு,அவர்
அணிந்திருந்து மூன்றேகால் பவுன் தங்க நகையை பறித்துக் கொண்டு தப்பி ஓடி
விட்டான்.தேவிகுளம் போலீசார் விசாரிக்கின்றனர்.


